Thursday, March 20, 2014

ஓரின சேர்க்கையாளர் என்பதை மறைக்க புது மனைவியை கொலை செய்து உடலை எரித்து நாடகமாடிய வங்கி ஊழியர்



இந்தியாவை சேர்ந்தவர் ஜஸ்வீர் ராம் கிண்டே (வயது 30).  இவர் ஒரு வங்கி பணியாளர்.  திருமண வயதை நெருங்கியதால் இவரது பெற்றோர் பெண் தேடியுள்ளனர்.  திருமண தரகர் ஒருவர் வழியே வர்கா ராணி (வயது 24) என்பவரை கிண்டேவின் பெற்றோர் பார்த்தனர்.  ராணி அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர்.  அவரின் குடும்பத்தினர், அறிவுள்ள, நன்கு படித்த மற்றும் அழகான தங்களது மகளுக்கு கிண்டே பொருத்தமானவராக இருப்பார் என்று முடிவு செய்து திருமணம் செய்து கொடுத்தனர்.
திருமணம் சிறப்பாக முடிந்தது.  அதன் பின்பு ஆகஸ்டில் இங்கிலாந்திற்கு செல்ல தம்பதியர்கள் தயாரானார்கள்.  கிண்டேவுடன் வெளிநாட்டிற்கு செல்ல ராணிக்கு விசா கிடைத்தது.  தம்பதியர்கள் இங்கிலாந்திற்கு சென்று இறங்கினர்.  அங்கு மேற்கு மிட்லேண்ட்ஸ் பகுதியில் வல்சால் என்ற இடத்தில் தங்களது வாழ்க்கையை தொடங்கினர்.
ஓரின சேர்க்கையாளர்
இந்த நிலையில் திடீர் என கிண்டே  செப்டம்பர் 12 ந்தேதி  அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தனது மனைவி ஓடி விட்டதாகவும் இங்கிலாந்து நாட்டிற்கு வருவதற்காக தேவையான விசா பெறுவதற்காகவே தன்னை ராணி திருமணம் செய்து கொண்டதாகவும்,  புகார் தெரிவித்தார். இதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது  கிண்டே வீட்டிற்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் ராணியின் அடையாளம் காண முடியாத உடல் பாகங்களை கண்டெடுத்து உள்ளனர். தொடர்ந்து நடந்த்திய விசாரணையில் கடந்த வருடங்களில், கிண்டே ஓரின சேர்க்கையாளர்களுக்கான சாட் லைனில் தொடர்பில் இருந்துள்ளார்.  அது குறித்து விவாதித்துள்ளார்.  அதுபோன்ற ஆண் நண்பர்களுடன் நட்பை அதிகரித்துள்ளார்.  பிர்மிங்காம் பகுதியில் அவர்களுக்காக நடத்தப்படும் கிளப்களில் கலந்து கொண்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
கிண்டேயின் பெற்றோர் திடீர் என திருமண ஏற்பாடு செய்து உள்ளனர்.   திருமணம்  முடிந்தும் அவரால் தனது பழைய வாழ்க்கையை மறக்க முடியவில்லை. தொடர்ந்து  ஓரின சேர்க்கையாளர்களுடன் தொடர்பில் இருந்து உள்ளார். இது மனைவிக்கும் தெரிய வந்து உள்ளது. இதனால்  செப்டம்பர் மாதம் மனைவியை வேக்குவம் கிளீனரால் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை எரித்து  வீட்டு தோட்டத்தில் புதைத்து விட்டு போலீசாரிடம் நாடகமாடி உள்ளார் என தெரிய வந்து உள்ளது.
வழக்குப்பதிவு
இது குறித்து அரசு வழக்கறிஞர் கால்ட் கூறும் போது :-
கிண்டே தன்னை மற்ற பெண்களுடன் தொடர்பில் உள்ளவர் இல்லை என்பதை காட்டி கொள்ளும் வகையிலும், தனது குடும்பத்தை பாதுகாக்கும் வகையிலும் மிக அறிவானவராக செயல்பட்டு உள்ளார்.  ராணி அந்நிய நாட்டில் தனித்து விடப்பட்ட, நண்பர்களற்ற மற்றும் தனி நபராக இருந்துள்ளார்.  பணவசதி படைத்த கிண்டே எந்த நிலையிலும் தனது மனைவியை விவாகரத்து செய்யும் முயற்சியில் இறங்குபவராகவே இருந்துள்ளார் என கூறினார்.
அவரது திருமணமானது பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும், ஓரின சேர்க்கையாளரான கிண்டே அதனை பெற்றோரிடம் இருந்து மறைப்பதற்காகவுமே நடந்துள்ளது என்றும் கால்ட் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சம்பவமானது செப்டம்பர் 12-ந்தேதி நடந்துள்ளது.  கிண்டே மற்றும் ராணி ஆகிய இருவரும் வீட்டில் இருந்துள்ளனர்.  அன்று மதியம் வீட்டில் இருந்து புகை கிளம்பியுள்ளதை அருகே வசித்தவர்கள் பார்த்துள்ளனர்.  அது தகன மேடையில் இருந்து வெளிவரும் வாடையாக இருந்துள்ளது.  அவர்களில் ஒருவர் கிண்டே வீட்டு கதவை தட்டி அவரிடம் பேசியபோது, பழைய பொருட்களை எரித்து கொண்டிருப்பதாக கிண்டே கூறியுள்ளார்.
கழிவு நீர் தொட்டியில்  மனைவியின் தலை
ஆனால், மறுநாள் இரவு வரை புகை தொடர்ந்து வந்து கொண்டிருப்பதை அருகில் வசித்தவர்கள் பார்த்துள்ளனர்.  ராணியின் உடலை முற்றிலுமாக அழிப்பதற்கு கிண்டே முயற்சித்துள்ளார்.  ஆனால், பெண் போலீசார் ஒருவர்  தோட்டத்தில் உள்ள கழிவு நீர் தொட்டி  மூடியை திறந்து பார்த்துள்ளார்.  அதில், மனித தலை ஒன்று எரிந்த நிலையில் உள்ளதை கண்டுள்ளார்.  அந்த தலையில் ஒரு சில பற்களே இருந்துள்ளன.
உடலானது மடித்து வைத்த நிலையில் சிசு ஒன்று இருப்பதை போன்று காணப்பட்டு உள்ளது.  அதனுடன் ராணியின் திருமண மோதிரம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.  வீட்டில் இருந்த கணினியை சோதனை செய்து பார்த்ததில், ராணி மரணத்திற்கு 4 வாரங்களுக்கு முன்பு ஆன்லைனில் கழிவு பொருட்களை எரிக்கும் கருவி ஒன்றை வாங்குவது குறித்து வீட்டில் உள்ளவர்களில் ஒருவர் தகவல் திரட்டி உள்ள விவரம் தெரிந்துள்ளது.  ராணியின் உடலை போலீசார் தேடி வந்தாலும் அன்று கிடைக்கவில்லை.
அதன் பின் மறுநாள் வீட்டின் பின்புறம் வந்த புகையை வைத்தே ராணி உடலை போலீசார் கண்டெடுத்துள்ளனர்.  உடலை கண்டெடுப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பாக, பெட்ரோல் பங்க் ஒன்றில் தண்ணீர் பாட்டிலில் கிண்டே பெட்ரோல் நிரப்புவது சி.சி.டி.வி. கேமிரா ஒன்றில் பதிவாகியுள்ளது.
இவை அனைத்தும் ராணியின் தந்தை சுர்ஜித் சிங்கிற்கு தெரியாது.  தனது மருமகன் ஓரின சேர்க்கையாளர் என்பதும் அவருக்கு தெரியாது.  அந்த விவரம் குறித்தும் எதுவும் அவருக்கு தெரியவில்லை.  அதன் பின்னர் போலீசார் அனைத்தையும் அவரிடம் விளக்கி கூறிய பின்னரே அவர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.  கொலை செய்ததை கிண்டே மறுத்தார்.  எனினும், போலீசாரிடம் நீதியை மறைத்து பொய் கூறியதை ஒப்பு கொண்டுள்ளார்.  விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
SOURCE: DAILY THANDHI

No comments:

Post a Comment