Thursday, March 20, 2014

வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்க்கும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு இல்லை; காங்கிரஸ் திட்டவட்டம்

புதுடெல்லி,
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். தொகுதி மக்களின் முடிவை கேட்டு வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து போட்டியிட தயார் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இந்த தொகுதியில் மோடியை எதிர்த்து களம் இறங்கப்போகும் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து, டெல்லியில்  பேட்டி அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லையே, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்குமா? என்று அவர்கள் கேட்டனர்.
அதற்கு ஆனந்த் சர்மா பதில் அளிக்கையில், காங்கிரசில் வேட்பாளர்களுக்கு என்ன பஞ்சமா? காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர் பெயரை உரிய நேரத்தில் அறிவிக்கும். வாரணாசி தொகுதிக்கு பல பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. காங்கிரஸ் வலுவான வேட்பாளரை களமிறக்கும். முழு வலிமையோடு அங்கு போட்டியிடுவோம். கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்குமா என்ற கேள்விக்கே இடமில்லை. அவருக்கு ஆதரவு தர மாட்டோம். காங்கிரஸ் தனது சுய பலத்தில் போட்டியிடும். மோடிக்கு ஒரு கடினமான போட்டியை ஏற்படுத்துவோம் என்று கூறினார்.

Source: DAILY THANDHI

No comments:

Post a Comment