Thursday, April 3, 2014

அஜித்துடன் மோதும் பிரபல தமிழ் நடிகர்கள்

தல அஜித் 55 படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்து இருந்தோம் .
தற்போது இப் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் கசிந்து உள்ளன.
தலக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் எமிஜாக்சன் நடிப்பது உறுதியாகி உள்ளன. அது மட்டும் இல்லாமல் இன்றைய தகவல் படி அஜித்துக்கு வில்லனாக அருண்விஜய் மற்றும் அரவிந்த்சாமி பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.
எப்போதுமே கௌதம் படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர்கள் வித்தியாசமாகவும், படு பவர் ஃபுல்லாகவும் இருப்பார்கள், அந்த வகையில் அரவிந்த்சாமி மற்றும் அருண்விஜய் ஒரு நல்ல வித்தியாசமான தேர்வு தான்.
ஏற்கனவே அறிவித்த படி இசையமைப்பாளர் ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைக்க, சுப்ரமணியபுரம் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவை பார்த்து கொள்கிறார். ஆரம்பம் படத்தை எடுத்த ஸ்ரீ சத்யா சாய்பாபா மூவிஸ் சார்பில் ஏ.ரகுராம் தயாரிக்கிறார்.

No comments:

Post a Comment