Sunday, May 17, 2015

லட்சுமி மேனனை காலேஜுக்கு அழைத்து சென்ற அஜித்





என்னை அறிந்தால்’ படத்துக்கு பிறகு அஜித் தற்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் லட்சுமிமேனன் அஜித்துக்கு தங்கையாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னைக்கு அருகில் உள்ள பின்னி மில்லில் பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். தற்போது அஜித்-லட்சுமிமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் படமாக்கி வருகின்றன.

இந்நிலையில், முதன்முதலாக இப்படத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் லட்சுமி மேனனை அஜித் காலேஜுக்கு அழைத்து செல்லும் படியாக அந்த புகைப்படம் அமைந்துள்ளது. லட்சுமிமேனன் சுடிதார் உடையில், கையில் ஒரு பையுடன் காலேஜூக்கு செல்லும் பெண் போல நிற்கிறார். அஜித் பச்சை நிற சட்டையும், வெள்ளை கலர் பேண்ட்டும் அணிந்து, கையில் ஒரு புத்தகத்துடன் நிற்கிறார். அஜித் நெற்றியில் திருநீறு அணிந்தும், தலைமுடியை தனது வழக்கமான சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலிலும் வைத்துள்ளார். முகத்தில் தாடியை சவரம் செய்துள்ளார். மேலும், லேசான மீசையும் வைத்துள்ளார்.

அஜித்தின் இந்த ஸ்டைல் பெரும்பாலான ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இருப்பினும் ஒரு சில ரசிகர்கள் அஜித்தின் இந்த கெட்டப், பார்த்து பார்த்து போரடித்துவிட்டது. வேறு ஸ்டைலில் நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Source: Maalaimalar

Wednesday, May 13, 2015

தனித்துவமானவன்’ – குட்டித்தலைக்கு பெயர் வெச்சாச்சு

Ajith_Family 2

கடந்த மார்ச் 2ம் தேதி அஜித் , ஷாலினி தம்பதியருக்கு இரண்டாவது குழந்தையாக அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததை முன்னிட்டு சமூக வலைகளில் ரசிகர்கள், பிரபலங்கள் #KuttyThala என ஹேஷ்டேக் வார்த்தையில் வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.
அடுத்த கேள்வியாக அஜித் குழந்தைக்கு என்ன பெயர் என கேள்விகள் எழத்துவங்கியது. தற்போது அஜித்தின் மகன் பெயர் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் , ஷாலினி தன் இரண்டாவது மகனுக்கு ‘ஆத்விக்’ என பெயரிட்டுள்ளனர்.
’ஆத்விக்’ என்றால் ’தனித்துவமானவன்’ என அர்த்தமாம். இதை அறிந்த ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர். இதை முன்னிட்டு ட்விட்டரில் ரசிகர்கள்
#AadvikAjithKumar
என ட்ரெண்டை உருவாக்கியுள்ளனர்.

SOURCE: TAMILFILMNEWS

கத்தி காயம் முதல் கல்யாணம்வரை.. ஆதர்ஷ தம்பதி அஜித்-ஷாலினிக்கு இன்று() 15வது திருமண நாள்

ajith

நடிகர் அஜித் வாழ்க்கையில் இப்போது அத்தனையும் சந்தோஷம்தான். மகன் பிறப்பு, மகனுக்கு பெயர் சூட்டுதல் என்று அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளுக்கு நடுவே, இதோ, இன்று தனது 15வது திருமண நாளில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
இந்த காதல் மன்னன். “மனம் விரும்பும் காதலியே, மனைவியாக வரும்போது, வாழ்க்கை இன்ப வரமாகும்” என்ற ‘இளைய தளபதி’ நடிகரின் திரைப்படப் பாடல் வரிகள், இந்த ‘தல’ நடிகருக்கு மிக பொருந்தும். அமர்க்களம் படத்தில் ஷாலியுடன் பழகும்போது மலர்ந்த காதல், இன்றுவரை அமர்க்களமாகவே போய்க் கொண்டுள்ளது. சினிமா வட்டாரத்தில் ஆதர்ஷ தம்பதிகள் என்று பெயரெடுத்த ஒரு சிலருக்கான பட்டியலில், இந்த தம்பதிகளும் இடம் உண்டு. “நான் ஒரு காட்டாறு மாதிரியான மனிதன்.
எதையோ தேடி அருவியாக விழுந்து, பாறைகளில் மோதி, தேவை இல்லாமல் பல விஷயங்களைச் சுமந்து கொண்டு இருக்கிறேன். இப்போதான் எனக்கான கடலை தேடிக் கண்டுபிடித்துச் சங்கமம் ஆகிறேன். இந்த கடல் என்னைக் கட்டுப்படுத்தவும், சாந்தப்படுத்தவும் உறுதுணையாக இருக்க ஆசைப்படுகிறேன்” என்று ஷாலினி குறித்த தனது காதல் பற்றி முன்பொருமுறை பேட்டியளித்தார் அஜித்.
எத்தனை தீர்க்க தரிசனமான வார்த்தைகள். காட்டாறுபோல பாய்ந்து, மனதில் பட்டதை பேசியதால், அவரை வீழ்த்த காத்திருந்தவர்கள் கிளப்பிய சர்ச்சைகள்தான் எத்தனை..ஆனால், ஷாலினி என்ற ஒரு பக்குவப்பட்ட பெண்மணி அஜித்தின் வாழ்க்கைக்குள் நுழைந்த பிறகு, அந்த காட்டாறு சமுத்திரத்தின் உள்ளே கலந்து, ஆழ்கடலின் அமைதியை தந்துகொண்டுள்ளது. இன்று, அவர் ஏதாவது பேசமாட்டாரா, எந்த தொலைக்காட்சியாலாவது தோன்ற மாட்டாரா என்று ரசிகர்கள் மட்டுமின்றி, அவரை வீழ்த்த வாய்ப்பு தேடியவர்களும், வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறார்களே. அது ஷாலினி என்ற மூன்றெழுத்து மந்திரத்தால் அல்லவா சாத்தியமாயிற்று.
தங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணாக தமிழக மக்களால் பார்க்கப்படும், ஷாலினியை திருமணம் செய்ததன் மூலம், ‘நான் தமிழ்நாட்டு மருமகன்’ என்றார் அஜித். ஆனால், இன்று தமிழ் ரசிகர்களோ அவரை ‘தல’மகனாக்கி, தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். அத்தனை, அஜித் ரசிகர்களுக்கும் ஷாலினி இன்று, அன்னைக்கு சமமான அண்ணியாகிவிட்டார். அமர்க்களம் பட சூட்டிங்கில், ஷாலினி கையில் கத்தி பட்டு ரத்தம் வந்த நிலையில், பதறிப்போய், துடிதுடித்து, ஒரு மருத்துவ குழுவையே ஸ்பாட்டுக்கு வரவைத்தார் அஜித்.
அடுத்தவருக்கு ஒன்றென்றால், தனக்கு வந்த துன்பம் போல பதறும் நல்ல மனிதராக இருக்கிறாரே என்று நினைத்து இதயம் இளகியது ஷாலினிக்கு.. ஆனால் கத்தி காயத்தை பற்றி கொஞ்சம் கூட கவலையின்றி ‘ஜஸ்ட் லைக் தட்’ என்று எடுத்துக்கொண்ட ஷாலினியை பார்த்து, அஜித்துக்கு ஒரு ஆர்வம் பற்றிக் கொண்டது. அதுதான் காதல் விதை விழுந்த இடம். ஒருவர் பதறுபவர், மற்றொருவர் பக்குவப்பட்டவர்.
இரு துருவங்களுக்குள் ஈர்ப்பு வருவது இயல்புதானே. ஒருவர் மிருதங்கமும், இன்னொருவர் வீணையும் வாசித்தால்தானே கச்சேரி களைகட்டும். அப்படித்தான், தற்போது அஜித் வாழ்வில் கச்சேரி களைகட்டிக் கொண்டுள்ளது. இப்போதுதான் திருமணம் செய்ததை போல இருந்தது…. இன்றோடு 15வது ஆண்டு திருமண நாளில் ஆதர்ஷ அஜித் தம்பதி காலடி எடுத்து வைத்துள்ளது.
அனௌஷ்கா, ஆத்விக்.. பெண்-ஆண் என இரு குழந்தைகள் இந்த திருமணத்தின் பொக்கிஷ பரிசுகள். வழக்கம்போல, ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் தங்கள் நாயகனை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். அதேபோன்ற வழக்கத்துடன், அமைதியாக ரசித்துக்கொண்டுள்ளார் இந்த ஆசை நாயகன்.

SOURCE: TAMILFILMNEWS

’நான் அஜித் ரசிகையாக்கும்’ கூறுகிறார் விஷால் நாயகி

’நான் அஜித் ரசிகையாக்கும்’ கூறுகிறார் விஷால் நாயகி

நகுல், அட்டகத்தி தினேஷ் நடித்த ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ படத்தில் நடித்த ஐஸ்வர்யா தத்தா, தற்போது விஷாலின் பாயும் புலி படத்தில் நடித்து வருகின்றார். மேலும், சில தமிழ்படங்களிலும் நடித்து வருகின்றார்.
இவர் கோலிவுட்டில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்தே அஜித் படங்களை தான் பார்த்து வருகின்றாராம். இவருக்கு அஜித் நடிப்பில் வெளிவந்த வீரம், ஆரம்பம் மற்றும் என்னை அறிந்தால் படங்கள் தான் மிகவும் பிடிக்குமாம்.
என்னை அறிந்தால் படத்தை மட்டுமே 20க்கும் அதிகமான முறை பார்த்துள்ளாராம். மேலும், அஜித்துடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது தான் இவரது ஆசை என்றும் கூறுகின்றார்.

SOURCE: TAMILFILMNEWS

தயாராகிறது என்னை அறிந்தால்-2 அஜித் நடிக்கவில்லையா?

ajith h  என்னை அறிந்தால் படம் ரிலீஸாவதற்கு முன்பு இப்படம் வெற்றிபெற்றால் என்னை அறிந்தால் பாகம் 2 எடுக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்திருந்தார் இயக்குநர் கெளதம் மேனன். அப்போது அவர் சொன்னதை போலவே படமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்பெற்றது.
இதனால் என்னை அறிந்தால் பாகம் 2-வை எடுக்க அவர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்தப் படத்தை இரண்டு மொழிகளில் அதாவது இந்தி, தமிழில் எடுக்கவுள்ளாராம் கெளதம் மேனன். தமிழில் அஜித்தே நடிக்கிறாராம். இந்தியில் அங்குள்ள பிரபலமான நடிகர் அபிஷேக் பச்சனை வைத்து இயக்கும் எண்ணம் இருக்கிறதாம். ஒருவேலை இந்தியில் அஜித் நடிக்க விரும்பினால் தலையை வைத்து இயக்குவேன் என்கிறார் கௌதம்மேனன்.
இந்த பிராஜெக்ட் பெரியது என்பதால் ஆர அமர யோசித்து எடுக்கப்போவதாகவும் அவர் கூறுகிறார். ஆனால் இது குறித்து தல தரப்பு என்ன சொல்கிறது என்று விசாரித்தால், பொதுவாக அஜித் ஒரு படத்தின் தொடர்ச்சியான கதைகளில் நடிப்பதை விரும்புவதில்லை என்றும் ஆனால் இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வித்தியாசமாக இருந்தால் யோசிக்க வாய்ப்பு உண்டு என்கிறார்கள். இன்னொரு தரப்பு அஜித் தமிழில் நடித்தாலும் இந்தியில் நடிக்க மாட்டார் என்று அடித்து கூறுகிறது.

SOURCE: TAMILFILMNEWS

தல 56 படத்துக்கு தீம் சாங் ரெடி – அஜித்துக்கு ட்விட்டரில் பிரபலங்கள் வாழ்த்து சிறப்புத் தொகுப்பு

ajith

இன்று அஜித் பிறந்தநாளை முன்னிட்டு தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி, அருண் விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ..
venkat
ani
arunvijay (1)
arunvijay
dhanu
dhaya
gv
jayam
pia
premji
raai






str

எத்தனை பேருக்கு தெரியும் தல அஜித்தை பற்றி

ajith

எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவிற்குள் நுழைந்து தன் நடிப்பாலும் உழைப்பாளும் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் மனத்தில் குடியிருப்பவர் அஜித்.
ரசிகர்களால் “அல்டிமேட் ஸ்டார்” என்றும் “தல” என்றும் அழைக்கப்பட்டு வரும் அஜித்திற்கு இன்று பிறந்தநாள். இன்று 44ஆவது பிறந்த நாள் காணும் அவருக்குத் ’தமிழ் உலகம்’ தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் அஜித்தை பற்றிய சிறிய குறிப்பு…
1971ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் பிறந்தவர் அஜித். சென்னையில் படித்து வளர்ந்த இவருக்குப் படிப்பில் அவ்வளவு ஆர்வம் இல்லை. அதனால் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விட்டு, பைக் மெக்கானிக்காகவும், சில நிறுவனங்களிலும் பணிபுரிந்துள்ளார்.
பைக், கார் ஓட்டுவதில் அதீத ஆர்வம்கொண்டு அஜித் தானாகவே அவற்றை ஓட்டக் கற்றுக்கொண்டதுடன் பைக் பந்தயங்களில் கவனம் செலுத்தி வந்தார். பைக், கார் பந்தயங்களில் கலந்து கொள்ளவேண்டும் என்றால் பணம் வேண்டும் அல்லவா… அதனால் சிறு, சிறு விளம்பரப் படங்களில் நடித்தார் அஜித். அந்தச் சிறு சிறு விளம்பரங்கள்தான் அவருக்குச் சினிமா ஆர்வத்தை உண்டாக்கியதோடு சினிமாவிலும் இழுத்துவிட்டன.
அஜித் தனது 21 வயதில், அதாவது 1992இல் ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்குச் சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது. இதற்குப் பின்புதான் செல்வா இயக்கத்தில் ”அமராவதி” என்ற தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
முதல் படம் வெற்றி இல்லை. இருப்பினும் அவர் மனம் தளரவில்லை. அடுத்த ஆண்டில் ’பாசமலர்கள்’, ’பவித்ரா’, ’ராஜாவின் பார்வையிலே’ படங்களில் நடித்தார். இதில் ’பவித்ரா’ படம் அஜித்துக்குப் பெயர் சொல்லும் படமாக அமைந்தது. அதன் பிறகு வசந்த் இயக்கிய ‘ஆசை’ படத்தில் நடித்த அஜித்துக்கு இப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமல்லாமல் அவருக்குப் பெரும் திருப்புமுனைப் படமாகவும் அமைந்தது.
இதற்கிடையில் மோட்டார் பந்தயம் ஒன்றில் போட்டியிட்டுப் படுகாயமடைந்ததால் அவரது சினிமா பயணத்தில் சிறிய தடை ஏற்பட்டது.. இந்தத் தடைக்குப் பின்தான் அஜித்துக்கு தமிழ் திரையுலகில் ஒரு பெரிய மாற்றமே ஏற்பட்டது. இதற்கு பின் அவர் நடித்த ’காதல் கோட்டை’ படமும், சரண் இயக்கத்தில் வெளிவந்த ’காதல் மன்னன்’ படமும் அவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடியது. இதைத் தொடர்ந்து மீண்டும் அஜித்தும், சரணும் இணைந்த படம் ‘அமர்க்களம்’. இப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்டார் அஜித்.
அதற்குப் பிறகு அஜித் பல படங்களில் நடித்தாலும் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய ’வாலி’ படமும் முருகதாஸ் இயக்கிய ’தீனா’ படமும் அவரை சினிமாவின் உச்சத்திற்குக் கொண்டு சென்றன. அஜித் கேரியரை ‘தீனா’ படத்துக்கு முன், பின் என இரண்டாகப் பிரிக்கலாம். ஏனென்றால் இந்தப் படத்திலிருந்துதான் அஜித் ஆக்ஷன் ஹீரோவாக மாறினார். அதுமட்டுமல்லாமல் இப்படத்திற்குப் பிறகுதான் அஜித்தை அவரது ரசிகர்கள் தல, தல என்று செல்லமாக அழைக்கத் தொடங்கினர்.
அதற்குப் பின்பு ஒரு படம் முழுக்க கோட் சூட், இன்னொரு படம் முழுக்க நரைத்த தலைமுடி, அப்புறம் ஒரு படம் முழுக்க வேட்டி சட்டை என எதையும், யாரையும் சட்டை செய்யாமல் தனக்கென ஒரு ராஜபாட்டை அமைத்துக்கொண்டு அதில் வீரநடை போட்டுவருகிறார் நம்ம ‘தல’ அஜித்.
இந்த வருட துவக்கத்திலேயே ‘என்னை அறிந்தால்’ எனும் வெற்றி படத்தை தந்த கையோடு, அழகான ஆண் குழந்தைக்கும் தந்தையாகி விட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் தல அஜித்.
இந்த பிறந்த நாளுக்கு அஜித்துக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய பிறந்த நாள் பரிசு மகன் ஆத்விக். இந்த சந்தோஷத்துடன் தனது பிறந்த நாளை அஜித் விமரிசையாக கொண்டாடுகிறாரோ இல்லையோ, அவரது ரசிகர்கள் நிச்சயமாக கொண்டாடி தீர்த்து விடுவார்கள்.

SOURCE: TAMILFILMNEWS