சென்னை
என்னுடன் நடித்த நடிகைகளில், அகம்பாவம் இல்லாத கதாநாயகி ஜெனிலியா என்று நடிகர் ஜெயம் ரவி கூறினார்.
பேட்டி
நடிகர் ஜெயம் ரவி, சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு ஜெயம் ரவி அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி:நிமிர்ந்து நில்Õ படத்தில் இரட்டை வேடங்களில் நடித்தது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:இது என் வாழ்க்கையில் முக்கியமான படம். இந்த அனுபவம் மறக்க முடியாதது. இந்த படத்தின் கதையை கேட்டபோதே படம் பார்த்த மாதிரி இருந்தது. அப்போதே பெரிய நம்பிக்கை வந்தது. படம் எடுத்து முடித்தபோது அது மேலும் அதிகமானது. வெளியாகி வரவேற்பு பெற்று ஓடும்போது, எனக்கு மிகப்பெரிய சக்தியாக மாறியுள்ளது.
சாக்லெட் பாய்
கேள்வி:உங்கள் மீதான சாக்லெட் பாய் இமேஜ் மாறாதது வருத்தம் அளிக்கிறதா?
பதில்:ஒரு நடிகன் எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும். அதற்கு இமேஜ் தடையாக இருக்கக் கூடாது. என் மீதான Ôசாக்லெட் பாய்Õ இமேஜை நான் வெறுக்கவில்லை. ஏனென்றால் காதலிப்பது போல் நடிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. காதலிக்க காதலி கிடைத்து காதலிப்பது எல்லோருக்குமா வாய்க்கிறது? எனக்கு படங்களில் காதலிகள் கிடைக்கிறார்கள். காதலிக்கிறேன்.
ஜெனிலியா
கேள்வி:உங்களுடன் நடித்த நடிகைகளில் உங்களை கவர்ந்தவர் யார்?
பதில்:ஜெனிலியாதான். அவர் நட்பாக பழகுவார். தான் என்கிற அகம்பாவம் எதுவும் அவரிடம் இல்லை. அவருடன் நடிக்கும்போது சவுகர்யமாக உணர்கிறேன். இதை சொல்வதில் எனக்கு தயக்கம் இல்லை. மற்ற கதாநாயகிகள் கோபித்துக் கொள்வார்களே என்று நான் நினைக்கவில்லை. நாமும் அப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றுதான் அவர்கள் நினைப்பார்கள் என நம்புகிறேன்.
நயன்தாராவுடன்...
கேள்வி:உங்கள் அண்ணன் ராஜா டைரக்ஷனில் நயன்தாராவுடன் நடிப்பது பற்றி...?
பதில்:அண்ணன் ராஜா டைரக்ஷனில் எம்.குமரன், உனக்கும் எனக்கும் ஆகிய படங்களில் நயன்தாராவை என் ஜோடியாக நடிக்க வைக்க முயற்சி நடந்தது. நேரம் அமையவில்லை. இப்போது இணைந்து நடிக்கிறேன். தமிழ் தெரிந்த நடிகை என்பதால் சுலபமாக புரிந்துகொண்டு நடிக்கிறார். நயன்தாரா திறமையான நடிகைதான்.
இவ்வாறு ஜெயம் ரவி கூறினார்.
இவ்வாறு ஜெயம் ரவி கூறினார்.
பேட்டியின் போது டைரக்டர் சமுத்திரக்கனி உடன் இருந்தார்.
SOURCE: DAILY THADHI

No comments:
Post a Comment