Tuesday, May 12, 2015

இந்த வருஷம் எல்லோருக்கும் ’தல’ தீபாவளி கன்ஃபார்ம்




சென்ற வருட தீபாவளிக்கே அஜித் ரசிகர்கள் ’தல’ தீபாவளியை எதிர்பார்த்தனர். ஆனால், தல பொங்கல் கூட கிடைக்கவில்லை. ஆனால் இந்த முறை நிச்சயம் ‘தல’ தீபாவளி தான் என்று கூறியுள்ளனர்.
அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படம் சென்ற வருட தீபாவளிக்கே வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டாலும், பின்னர் சில காரணங்களைக் காட்டி பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவித்தனர்.
ஆனால், அப்போதும் சொதப்பி ஒருவழியாக பிப்ரவரி 5-ல் படத்தினை வெளியிட்டனர். படம் நல்ல வசூலைப் பெற்றுத் தந்தாலும், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரவில்லை என்றே கூறவேண்டும்.
தற்போது அடுத்த படத்தினை ஆரம்பித்து விட்டார் அஜித். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகை லட்சுமி மேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் முதலில் சந்தானம் ஒப்பந்தமானாலும், தற்போது அவருக்குப் பதிலாக, சூரி நடிக்கின்றார்.
சிவா இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகும் இப்படத்தை தீபாவளிக்கு வெளியிடும் முடிவில் உள்ளனர்.

SOURCE: TAMILFILMNEWS

No comments:

Post a Comment