Tuesday, May 12, 2015

கெஸ்ட் ரோலில் நடிக்க முடியாது மச்சினியிடம் அஜித் திட்டவட்டம்

ajith

நடிகர் அஜித்தின் மச்சனியும், ஷாலினியின் தங்கையுமான பேபி ஷாமிலிக்கு தமிழில் பெரும் நடிகையாக வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.
மணிரத்னத்தின் ‘அஞ்சலி’ படத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
பின்னர், தெலுங்கில் சித்தார்த்துடன் ‘ஓய்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். தொடர்ந்து மேற்படிப்பிற்காக சிங்கப்பூர் சென்ற இவர், தற்போது மீண்டும் நடிக்க முடிவெடுத்துள்ளாராம்.
ஆனால், இவர் சான்ஸ் கேட்க செல்லும் இடங்களில் எல்லாம், ‘அஜித்தை கெஸ்ட் ரோல் செய்ய சொல்ல முடியுமா?’ என்று கேட்கின்றார்களாம். இந்த விஷயத்தை தனது தந்தை மூலமாக அஜித்திடம் கொண்டு சென்றுள்ளார், ஷாமிலி.
ஆனால் அஜித்தோ, ‘கெஸ்ட் ரோலில் நடிக்க முடியாது. அவங்களுக்கு திறமை இருந்தால் அதை வைத்து ஜெயிக்கட்டும்’ என்று கூறியிருக்கின்றாராம்.

SOURCE: THEFILMNEWS

No comments:

Post a Comment