நட்சத்திர தம்பதிகளில் அனைத்துத்தரப்பு ரசிகர்களாலும் மிகவும் விரும்பப்படும் ஜோடிகளில் அஜித்தும், ஷாலினியும் முக்கியமானவர்கள்.
நேற்று இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இது இவர்களின் இரண்டாவது குழந்தை. ஏற்கனவே, அவர்களுக்கு 7 வயதில் அனொஷ்கா என்னும் பெண் குழந்தை இருக்கிறது. இதனை கொண்டாடும் வகையில் அஜித் ரசிகர்கள் குட்டி தல எனும் டுவிட்டரில் ஹேஷ்டேக்கை உருவாக்கி அதை இந்திய அளவிலும், உலக அளவிலும் பிரபலப்படுத்தினர்.
இந்திய அளவில் குட்டி தல என்கிற ஹேஷ்டேக் மட்டும் டிரெண்டிங்கில் 12 மணிநேரம் வரை முதலிடத்தில் இருந்தது. தற்போது இது டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இதனை டிரெண்ட் செய்யும் போது தலயின் குழந்தை என ஒரு குழந்தையின் போட்டோவும் வருகிறது. ஆனால் அது தலயின் குழந்தை இல்லை என்பது தான் உண்மையான செய்தி ஆகும். அதனை நம்ப வேண்டாம் என பேஸ்புக்கில் அஜித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் தொடர்ந்து இப்போதும் குட்டி தல வந்தாச்சு, குட்டி தல அரைவ்ட், என்றெல்லாம் டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். இதனிடையே தனுஷ், சிவகார்த்திகேயன், டி.இமான், விக்ரம் பிரபு உட்பட பல திரைப்பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.




No comments:
Post a Comment