Tuesday, March 3, 2015

கிரிக்கெட் விளையாடும் அஜித்குமார்



பைக் ரேஸ் வீரரான அஜித்துக்கு, கிரிக்கெட் விளையாடுவதும் ரொம்ப பிடிக்கும். படப்பிடிப்பு தளங்களில் ஓய்வு கிடைத்தால் ஸ்பாட்டில் பிரீயாக இருப்பவர்களை அழைத்து, கிரிக்கெட் விளையாடத் துவங்கி விடுகிறார். அப்போது, தன் டீம் மட்டுமின்றி எதிர் டீமை சேர்ந்தவர்கள் ரன் எடுத்தாலும், அவர்களை கைதட்டி உற்சாகப்படுத்துகிறார். இதனால், மற்ற நடிகர்களின் படப்பிடிப்புகளில் பணியாற்றுவோர், கதாநாயகர்களை விட்டு விலகி நிற்க, அஜித் படப்பிடிப்பிலோ, அனைவருமே அவரைச் சுற்றி அமர்ந்து, ஜாலியாக பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.

No comments:

Post a Comment