சமீபகாலமாக அஜித்தின் புகழை பாடிய வண்ணம் இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. இதுகுறித்து அவர் கூறும்போது, நான் அஜித்தை புகழ்வது சிலருக்கு பிரச்னையாக இருக்கிறது. இதற்காக நான் என்ன செய்வது. சென்னை 28 போன்ற லோக்கல் படத்தை எடுத்த என்னுடன் பணியாற்ற எந்த நடிகரும் முன்வராத சமயத்தில், அஜித்தே என்னிடம் கதை கூட கேட்கவில்லை. நான் நடிக்க கேட்டவுடன் ஒப்புக்கொண்டார். நான் ரஜினியின் தீவிர ரசிகன். அவருக்கு பிறகு அஜித் தான் எனக்கு பிடிக்கும் என்று கூறினார். மேலும், அஜித், விஜய் இருவருமே எனக்கு நல்ல நண்பர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment