Tuesday, July 8, 2014

விதார்த்தை பாராட்டிய அஜித்

மைனா படத்தின் மூலம் பலரது பாராட்டையும் பெற்ற நடிகர் விதார்த், அதன்பிறகு சரியான படங்கள் அமையாததால் சிறுசிறு ரோல்களில் மட்டும் நடித்து வந்தார். இந்நிலையில், அஜீத்தின் 54வது படத்தை சிறுத்தை பட இயக்குனர் சிவா இயக்குகிறார். இப்படத்தில் விதார்த்திற்கு முக்கிய கதாபாத்திரத்தை அவர் வழங்கியுள்ளார். 
இதுகுறித்து விதார்த் கூறும்போது, படப்பிடிப்பு விரைவில் முடிக்கப் படவுள்ளது. நவம்பரில் பட சூட்டிங் முடிந்துவிடும் என எதிர்பார்க்கிறேன். இப்படத்தின் மூலம் அஜீத்துடன் 100 நாட்கள் வரை செலவழிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை என் வாழ்நாளில் மறக்கமாட்டேன். எனது ஆள் படத்தின் டிரைலரை பார்த்த அஜீத், என்னை பாராட்டியதோடு மட்டுமில்லாமல், படம் மெகா ஹீட்டாகும் என்றும் தெரிவித்தார். அதனால் தான் ஆள் படத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறேன் என்றார். அஜீத்தின் 54வது படத்திற்கு பிறகு, விதார்த் ஜன்னல் ஓரம் மற்றும் பட்டைய கிளப்பு பாண்டியா உள்ளிட்ட படங்களில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment