Sunday, July 6, 2014

கொள்கையை தளர்த்திய தகதக நடிகை!

மழையை கண்டால் அடடா மழைடா அட மழைடா என்று குதூகலமாகிவிடும் தகதக நடிகை இந்தியில் நடிக்க ஆசைப்பட்டு அங்குள்ள இயக்குனர்கள், ஹீரோக்களின் அன்புக்கு பாத்திரமாகி இரண்டு படங்களில் நடித்தார். செம கிளாமர், பிகினி டிரஸ் என்று கலக்கினார். ஆனால் இரண்டு படமுமே ஃப்ளாப் ஆனதில் நடிகை ரொம்பவே அப்செட்.

பாலிவுட் நடிகையாகிவிட்டதால் கோலிவுட், டோலிவுட்டில் சம்பளத்தை கோடிக்கு மேல் ஏற்றினார். பாலிவுட் சொதப்பியதால் ஏற்றிய சம்பளத்தை அதிரடியாக குறைத்து சான்ஸ் கேட்டு வருகிறார். தமிழில் ஒரு கோடி சம்பளம், விஜய், அஜீத், சூர்யா உடன்தான் நடிப்பு என்று ஏகப்பட்ட கண்டிசன்கள் போட்டவர் இப்போ அதையெல்லாம் நீக்கிவிட்டு ஆடி தள்ளுபடி ரேன்ஞ்சுக்கு வந்துவிட்டாராம்.

No comments:

Post a Comment