Sunday, July 6, 2014

அஜித்தின் 55வது பட டீஸர் எப்போது?





வீரம் படத்தை அடுத்து அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.
இரட்டை வேடத்தில் நடிக்கும் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் அனுஷ்கா நடிக்கிறார்கள். இவர்களுடன் அருண் விஜய், விவேக் முதலானோரும் நடிக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இயைமைக்கும் இந்தப் படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார்.
ஏற்கெனவே படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் ஆரம்பிக்க இருக்கிறார்கள். முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையை சுற்றியிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மலேசியாவிலும் நடத்தி முடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸரை அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம். அஜித் - கௌதம் மேனன் முதன் முறையாக இணைந்திருக்கும் படம் என்பதால் படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment