சென்னை,
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து விரைவில் திரைக்கு வரவுள்ள திரைப்படம் கத்தி. விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. வெளியிட்ட சில நேரங்களிலேயே இப்போஸ்டருக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனால் இப்போஸ்டர் குறித்த சர்ச்சைகளும் ஆங்காங்கே எழுந்துள்ளன.கடந்த 2010ம் ஆண்டு ஷபா நியூஸ் பேப்பர் டிவி கமர்ஷியல் என்று வெளியிடப்பட்ட விளம்பரமும் இதே போன்று தான் வடிவமைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் முன்னர் விஜய் நடித்த துப்பாக்கியில் ராணுவ உடையில் உள்ள விஜய், அவருடைய தொப்பியை அணிந்திருக்கும் காஜல் அகர்வாலை தூக்கிக்கொண்டு செல்வது போன்று போஸ்டர் வெளியானது. இது ஹாலிவுட்டில் புகழ்பெற்ற ரிச்சர்ட் கிரேயின் படமான “அன் ஆபிஸர் அண்டு எ ஜென்டில்மேன்” என்னும் திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்ற சர்ச்சை கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
SOURCE: DAILY THANDHI

No comments:
Post a Comment