Thursday, July 3, 2014

வாலு பண்ணும் வம்பு: நடிகை பம்ளிமாஸ் கதறல்

வம்பு நடிகரின் இரண்டு எழுத்து படத்துக்காக அவருடன் டூயட் பாட வெளிநாட்டுக்கு போயிருக்கிறார் பம்ளிமாஸ் நடிகை. வழக்கமாக உடன் செல்லும் தாய்குலம் இப்போது செல்லவில்லையாம். மாறாக பம்ளிமாஸின் அண்ணனையும், அவரது நண்பரான ஒரு பயில்வானையும் பாதுகாப்புக்காக அனுப்பி வைத்திருக்கிறாராம். அவர்கள் எப்போதும் நடிகையின் அருகிலேயே இருந்து பாதுகாக்கிறார்களாம்.

வெளிநாட்டு படப்பிடிப்பில் எப்படியும் நடிகையுடன் சமாதானமாகி காதலை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்த வம்பு நடிகரின் முயற்சிகள் பலிக்க வில்லையாம். பாடல் காட்சி என்பதால் பேசுவதற்குகூட வாய்ப்பில்லையாம். டான்ஸ் மாஸ்டர் சொன்னபடி ஆடிவிட்டு கேரவனுக்குள் புகுந்து கொள்கிறாராம் நடிகை. வம்பு நடிகருடன் மகளுக்கு துளியூண்டு காதல் மிச்சமிருப்பதால் வம்பு நடிகர் தன் வழக்கமான பாணியில் காதல் மொழியை பொழிந்து விட்டால் மகள் மனம் மாறிவிடக்கூடும் என்பதற்குத்தான் இந்த கூடுதல் பாதுகாப்பை ஏற்பாடுகளைச் செய்தாராம் தாய்குலம்.

SOURCE: DINAMALAR

No comments:

Post a Comment