சின்னத்திரைக்கும் கவர்ச்சி நடிகை ஷகீலாவுக்கும் ஏழாம் பொருத்தம். காரணம் அவர் ஹீரோயினாக நடித்த படங்கள் எதையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப முடியாது. ரிக்கார்ட் டான்ஸ் அளவிற்கு நடன நிகழ்ச்சிகள் நடத்தும் குடும்ப சேனல்கள் ஷகிலாவை பேட்டி எடுத்தால் இமேஜ் போய்விடும் என்று அவர் பக்கம் திரும்பாது. ஆனால் ஷகிலா ஒரு கன்னட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
கன்னட நடிகர் சுதீப் நடத்தி வரும் பிக் பாஸ் 2 என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டிருக்கிறார். இப்போது ஷகிலா இந்த நிகழ்ச்சியில் அளித்துள்ள பேட்டிதான் கன்னடத்தில் ஹாட் டாபிக். தன் வாழ்க்கையின் முக்கியமான சம்பவங்கள் பற்றியும், தான் சினிமாவுக்குள் தள்ளப்பட்டது பற்றியும், கவர்ச்சி படங்களில் விழுந்தது பற்றியும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
தன்னோட வாழ்க்கை துயரங்களுக்கு தனது குடும்பத்தினர்தான் காரணம் என்றும் மறுபிறவி என்று ஒன்று இருந்தால் இதே குடும்பத்தில் பிறந்து அவர்கள் அனைவரையும் பழிவாங்க வேண்டும் என்றும் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார். பேட்டி யூ டியூப்பிலும் பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கிறது.

No comments:
Post a Comment