Monday, July 7, 2014

குளுகுளு குற்றாலம் போகலாம் வாங்க?

  • தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஒவ்வொரு ஆண்டும் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களை காண ஏற்பாடு செய்து வருகிறது. அதுவும், அந்த இடங்களில் சீசன் தொடங்குகின்ற மாதத்தில், சுற்றுலா வளர்ச்சி கழகம் அந்த இடங்களுக்கு சென்று வர சிறப்பு ஏற்பாடுகளை செய்கிறது. தற்போது குற்றாலத்தில் சீசன் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மட்டுமில்லாமல், வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள், இயற்கை ஆர்வலர்கள் என எராளமானோர் குற்றாலத்திற்கு வரத் தொடங்கி உள்ளனர். அவர்களின் வசதிக்காக, இக்கழகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்து உள்ளது. அது குறித்த விவரம் வருமாறு: வெள்ளிக்கிழமை மாலை 4.30க்கு பேருந்து புறப்படும். இரண்டு நாள் சுற்றுலா என்பதால், பயணிகள் தென்காசியில் இரவு தங்க வைக்கப்படுவர். ஞாயிற்றுக்கிழமை காலை குற்றாலம் காண அழைத்து செல்லப்படுவர். அங்கிருந்து சென்னை திரும்பும் வழியில், விஸ்வநாதர் கோயில் (தென்காசி), ஆண்டாள் கோயில்(ஸ்ரீ வில்லிப்புத்தூர்), மீனாட்சி அம்மன் கோயில்(மதுரை), ஆகிய கோயில்களை காண ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கட்டண விவரம்: ரூ.3,500 (ஒருவருக்கு, தனி அறை வசதி) ரூ.3,250( ஒருவருக்கு, 2 பேர் பகிர்ந்து கொள்ளும் அறை வசதி) சிறுவர், சிறுமியர்(4 வயது முதல் 10 வயதுவரை) ரூ.3000 சீனியர் சிட்டிசன்களுக்கு இந்த கட்டணத்தில் 20 சதவீதம் சலுகை உண்டு. இந்த சலுகையை பெற வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு போன்றவற்றில் ஏதாவது ஒன்றை கொண்டு வர வேண்டும். இதுகுறித்து, மேலும் தகவல் பெற விரும்புவோர் வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment