புதுடெல்லி: தனியார் எப்.எம். ரேடியோக்களுக்கும் செய்திகளை வழங்க விரைவில் அனுமதி வழங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எப்.எம். ரேடியோ பிரதிநிதிகள் பலர், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சமீபத்தில் சந்தித்து பேசினர்.

அப்போது செய்திகளை ஒலிபரப்பு செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனவும், ஆல் இந்தியா ரேடியோவிடம் இருந்தே செய்திகளை பெற்று ஒலிபரப்ப தயாராக இருக்கிறோம் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து, செய்திகளை ஒலிபரப்பு செய்வதற்கு அனுமதி வழங்குவது குறித்து எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும், இதுகுறித்த விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாகவும், எப்.எம். ரேடியோக்களுக்கு அனுமதி வழங்குவது பற்றி விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் பிரகாஷ் ஜவடேகர் பதிலளித்தாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், ஆல் இந்தியா ரேடியோவிடம் இருந்து செய்திகளை பெற்று ஒலிபரப்புவதைவிட, பி.டி.ஐ. (பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா)விடம் இருந்தே செய்திகளை பெற்று ஒலிபரப்பலாம் என அவர் கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

SOURCE: VIKATAN

No comments:
Post a Comment