Thursday, July 3, 2014

குரூப்-1 தேர்வு விண்ணப்பதாரர் விவரம் இணையதளத்தில் வெளியீடு!

சென்னை: குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதை இணையத்தில் விண்ணப்பதாரர்கள் சரிபார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பில், ''குரூப்-1 தேர்வுக்கான விண்ணப்பத்தை டி.என்.பி.எஸ்.சி. பெற்றுக்கொண்டதை இணையத்தில் சரிபார்க்கலாம். இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் விவரம் www.tnpsc.gov.in என்ற தளத்தில் வெளியீடப்பட்டுள்ளது.
தேர்வு எழுதுவோர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் மின்னஞ்சலில் அணுகலாம். contacttnpsc@gmail என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ரசீது நகலுடன் ஜூலை 8ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.

ஜூலை 20ஆம் தேதி நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கு 1.65 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு பதிவிறக்கம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்'' எனக் கூறப்பட்டுள்ளது.
SOURCE: VIKATAN

No comments:

Post a Comment