"பிரதமர் பொறுப்புக்கு வந்த பிறகு என்னையோ, என் குடும்பத்தினரையோ
மையப்படுத்த மாட்டேன்; யாரையும் பழிவாங்கும் நோக்கில், எந்தவொரு
நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டேன்; மனதார எந்த தவறும் செய்ய மாட்டேன், என,
பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உருக்கமாக கூறினார்.
டில்லியில் நேற்று, லோகசபா தேர்தலுக்கான, பா.ஜ., தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா நடந்தது. அந்த நிகழ்ச்சியில், கட்சியின் தலைவர், ராஜ்நாத் சிங், மூத்த தலைவர் அத்வானி, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான முரளி மனோகர் ஜோஷி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் முன்னிலையில், மோடி உருக்கமாகவும், உறுதியாகவும் பேசியதாவது:
நாட்டுக்கு சேவை செய்யும் பணியாக பிரதமர் பதவியை, நாட்டுக்கு சேவை செய்யும் பணியாக கருதி நல்ல முறையில் நிச்சயம் செய்வேன். அந்த பொறுப்புக்கு வந்து அமர்ந்த பிறகு நாட்டு மக்களுக்கு தேவையான எந்த காரியம் என்றாலும், அதை நிச்சயம் முழுவதுமாக நிறைவேற்றி முடிப்பேன்.
பிரதமர் பதவிக்கு வந்த பிறகு, என்னை நான் முன்னிலைப்படுத்திக் கொள்ள மாட்டேன். அரசு விவகாரங்கள் எதிலும், என் குடும்பத்தை மையப்படுத்தும் வகையில் எந்தவொரு செயலிலும் ஈடுபட மாட்டேன்.
என்னைப் பற்றி கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. பொறுமை மற்றும் சகிப்பு தன்மை இல்லாதவர், யாருடனும் ஒத்துப்போகாதவர், என்றெல்லாம் கூட சொல்கின்றனர். ஒன்றை மட்டும் நான் வாக்குறுதியாகவே தருகிறேன்... பிரதமர் பொறுப்புக்கு வந்த பிறகு எந்தவொரு சூழ்நிலையிலும் யாரையும் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட மாட்டேன். பா.ஜ.,வின் இந்த தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவை, தேர்தல் நேரங்களில் வழக்கமாக நடைபெறும் சடங்கு போல் கருத வேண்டாம். இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் முழுவதுமாக நிறைவேற்றுவோம். நல்ல ஆட்சியைத் தர வேண்டும் என்பது என் லட்சியம். சிறந்த நிர்வாகத்தை இந்த நாட்டு மக்களுக்கு தர வேண்டுமென்று மிகவும் ஆவலாக உள்ளேன். அதற்காக, மனதார எந்த தவறும் செய்ய மாட்டேன். இவ்வாறு மோடி கூறினார்.
நிச்சயம் நல்லதை செய்வார் : பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: தவறான பிரசாரத்திற்கு, நரேந்திர மோடி பலிகடா ஆகிவந்துள்ளார். அவர் மீது மக்கள், நம்பிக்கை வைக்க வேண்டும்; நிச்சயம்
நல்லதை செய்வார். காங்கிரஸ் அரசை தூக்கி எறிவதற்கு மக்கள் தயாராகி விட்டனர். மத்தியில் அடுத்து, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தான் வரப் போகிறது. மக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகள் குறித்து, விரிவான வாக்குறுதிகளுடன் முழுமையான வகையில் எங்கள் தேர்தல் அறிக்கை உள்ளது. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.
மீண்டும் "இந்துத்துவா' : தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில், பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் தொகுதியின், பா.ஜ., வேட்பாளர் அருண் ஜெட்லி, தேர்தல் பிரசாரத்தில் இருந்தபடியே, "வீடியோ
கான்பரன்சிங்' மூலம் பேசினார்.
பின் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், "அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதே. அப்படியெனில், மீண்டும், "இந்துத்துவா கொள்கையை, பா.ஜ., கிளப்புகிறதா...' என, நிருபர்கள் சிலர் கேட்டனர். அதற்கு, தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு தலைவர், முரளிமனோகர் ஜோஷி, ""ராமர் கோவில் குறித்து, தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுவது ஒன்றும் புதிதல்ல. கடந்த தேர்தல் அறிக்கையிலும் கூட குறிப்பிடப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் திட்டத்தை, வளர்ச்சித் திட்டமாகவே பா.ஜ., பார்க்கிறது. இந்துத்துவாவுக்கும், தேர்தலுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. நல்ல ஆட்சியை வழங்க, பா.ஜ., தயாராக இருக்கிறது, என்று பதிலளித்தார்.
தேர்தல் நடத்தை விதிமீறலா? : "லோக்சபா தேர்தலில் நேற்று முதற்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நாளில், பா.ஜ., தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என கூறப்படும் புகார்கள் மீது ஆராய்ந்து முடிவெடுக்கப்படும்,'' என, தேர்தல் கமிஷனர்களில் ஒருவரான பிரம்மா கூறினார்.
பிற கட்சிகள், தங்களின் தேர்தல் அறிக்கைகளை பல நாட்களுக்கு முன்பே வெளியிட்ட நிலையில், பா.ஜ., நேற்று தான் வெளியிட்டது. மொத்தம் ஏழு வடகிழக்கு மாநிலங்களில், இரண்டு மாநிலங்களான அசாம் மற்றும் திரிபுராவில் தேர்தல் நடைபெற்றது. அந்த நாளில், பா.ஜ., தேர்தல் அறிக்கை வெளியிட்டது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என, சில கட்சிகள் குற்றம்சாட்டின. இது குறித்த, தேர்தல் கமிஷனர்களில் ஒருவரான பிரம்மாவிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் கூறியதாவது: பா.ஜ.,வின் நடவடிக்கை, நடைமுறைக்கு எதிராக உள்ளது. வழக்கத்திற்கு மாறான வகையில் தன் தேர்தல் வெளியீட்டை அக்கட்சி நிகழ்த்தியுள்ளது. ஓட்டுப்பதிவு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில், இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை. ஓட்டுப்பதிவு நடப்பதற்கு, 48 மணி நேரத்திற்கு முன், எந்தவொரு தேர்தல் பிரசார யுக்திகளையும் அரசியல் கட்சிகள் மேற்கொள்ள கூடாது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இதுகுறித்து, சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து, எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். இந்த நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்த, "டிவி' நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு பிரம்மா கூறினார்.
SOURCE: DINAMALAR

No comments:
Post a Comment