சென்னை: ""தி.மு.க.,வை அழிக்க பிறந்தவர் ஸ்டாலின். அவர் கண்டிப்பாக,
தி.மு.க.,வை அழிப்பார் என்பதில், மாற்று கருத்து இல்லை,'' என, தி.மு.க., -
எம்.பி.,யான, நடிகர் ரித்தீஷ் கூறினார். அ.தி.மு.க.,வில் விரைவில் இணைவார் என, எதிர்பார்க்கப்பட்ட, அழகிரி
ஆதரவாளரான, ராமநாதபுரம் தி.மு.க., - எம்.பி., நடிகர் ரித்தீஷ், நேற்று
காலை, சென்னை, போயஸ் கார்டனில், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து,
அ.தி.மு.க.,வில் இணைந்தார். அவருக்கு, கட்சி உறுப்பினர் அடையாள அட்டையை,
ஜெயலலிதா வழங்கினார்.
இதன்பின், நிருபர்களுக்கு பேட்டி அளித்த, அவர் கூறியதாவது:
அ.தி.மு.க.,வில் இணைந்து விட்டீர்களா?
முதல்வர் முன்னிலையில், இன்று அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளேன். அ.தி.மு.க., வெற்றிக்காக, தமிழகம் முழுவதும், நாங்கள் உழைப்போம். அ.தி.மு.க., ஜெயித்து, ஜெயலலிதா பிரதமராவார்.
தி.மு.க.,வில், "சீட்' மறுக்கப்பட்டதால், அ.தி.மு.க.,வில் இணைந்ததாக கூறப்படுகிறதே?
நான், 10ம் வகுப்பு படிக்கும் போதே, தி.மு.க.,வில் சேர்ந்தேன்; 2008ல் சேரவில்லை. தி.மு.க., சார்பில், 15 ஆண்டுகளாக, வார்டு செயலர் பதவியில் இருந்தேன். இம்முறை போட்டியிட, "சீட்' கேட்கவில்லை.
அழகிரி, அ.தி.மு.க.,வில் சேருவாரா?
அழகிரியின் மகன் வீடு, சென்னையில் உள்ளதால், அவரை பார்க்க இங்கு வருவார். அ.தி.மு.க.,வில் சேருவாரா என, அவரைதான் கேட்க வேண்டும்.
அ.தி.மு.க.,விற்கு பிரசாரம் செய்வீர்களா?
அனைத்து தொகுதிகளிலும், பிரசாரம் செய்வேன்.
நில மோசடி வழக்கில் இருந்து தப்பிக்கவே, அ.தி.மு.க.,வில் சேர்ந்ததாக கூறப்படுகிறதே?
நில மோசடி வழக்கு எல்லாம் முடிந்து விட்டது.
திடீரென அ.தி.மு.க.,வில் சேர காரணம் என்ன?
நான் தி.மு.க.,வில், அழகிரி உடன் இருந்தேன். அவர் எடுத்த முடிவு, பலமானதாக இல்லை. எனவே, மக்கள் விரும்பும் முதல்வர் உள்ள கட்சியில் சேர்ந்தேன்.
அழகிரி முடிவு பலமானதாக இல்லை என, எதை வைத்து கூறுகிறீர்கள்?
அழகிரி, இன்று தி.மு.க., தலைமையை எதிர்த்த முடிவு வரவேற்கத்தக்கது. கருணாநிதியை காப்பாற்ற அவர்தான் உள்ளார். ஆனால், உட்கட்சி தேர்தல் நடந்த நேரத்தில், இந்த மாதிரியான முடிவை, அவர் எடுத்திருந்தால், பாதுகாப்பாக இருந்திருக்கும். ஸ்டாலின் தனக்கு வேண்டியவர்களை கொண்டு வந்துவிட்டார்.
தி.மு.க., வெற்றி வாய்ப்பு எப்படி?
தி.மு.க., வெற்றியே பெறாது.
தி.மு.க.,விலிருந்து, திடீரென விலக காரணம் என்ன?
தி.மு.க., அழிவுப்பாதையை நோக்கி செல்கிறது. கட்சியை ஸ்டாலின் அழித்துக் கொண்டிருக்கிறார். விரை வில், கருணாநிதியே கட்சியில் இல்லை என்ற அறிவிப்பு வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. "தி.மு.க.,வை யாராலும் அழிக்க முடியாது' என, கருணாநிதி மட்டுமே கூறி வருகிறார். அப்படி சொல்லும் அவரே, தற்போது ஸ்டாலின் பின்னால் செல்லும் நிலை வந்துள்ளது.
"தி.மு.க.,வை அழிக்க, வேறு யாரும் எங்கிருந்தும் வரவேண்டியதில்லை. ஒரு தி.மு.க.,காரனே போதும், தி.மு.க.,வை அழிக்க' என, அண்ணாதுரை கூறினார். அதன்படி, தி.மு.க.,வை அழிக்கும், சகுனியாக ஸ்டாலின் உள்ளார்.
மின் தட்டுப்பாட்டை சொல்லி, ஸ்டாலின் ஓட்டு கேட்கிறார். தி.மு.க., ஆட்சியில், மின்துறை அமைச்சராக, ஆற்காடு வீராசாமி இருந்தார். அவர் கோட்டைக்கு போவாமலும், தன் துறையை ஒழுங்காக கவனிக்காமலும் இருந்தார். அதுவே, தற்போதைய மின்வெட்டுக்கும், மின் உற்பத்தி அதிகரித்ததற்கும் காரணம்.
மத்திய அமைச்சரவையில், தி.மு.க., இரு முறை இடம் பெற்றது. தமிழகத்தில், மின்வெட்டு பிரச்னையை தீர்க்க, மத்திய அரசில் மின் துறையை, தி.மு.க., கேட்டுப் பெற்றிருக்கலாம். ஆனால், தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையை மட்டுமே, இரண்டு முறையும் யாருக்காகவோ கேட்டுப் பெற்றனர்.
பா.ஜ.,வினர், மோடியை பிரதமர் என்றும், காங்கிரசார், ராகுலை பிரதமர் என்றும், அ.தி.மு.க.,வினர், முதல்வர் ஜெயலலிதாவை பிரதமர் என்றும் கூறி ஓட்டு கேட்கின்றனர். ஆனால், தி.மு.க.,வில் யார் பிரதமர் என, சொல்லி ஓட்டு கேட்க முடியவில்லை.
கொம்புள்ள மாடுகளையே, ஜல்லிக்கட்டுகளுக்கு பயன்படுத்துவர். மொட்டை மாடுகளை பாவம் விட்டு விடுவோம் என, விரட்டி விடுவர். அதுபோலவே, தி.மு.க.,வின் தேர்தல் பிரசாரம் உள்ளது.
நான், எதிர்பார்ப்புடனோ, நிபந்தனை விதித்தோ, அ.தி.மு.க.,வில் சேரவில்லை. முதல்வர் ஜெயலலிதாவின் துணிச்சல், அறிவு, ஆற்றலை கண்டு வியந்தே, அ.தி.மு.க.,வில் இணைந்தேன். அவரை நான் சந்தித்த போது, என்ன படித்துள்ளீர்கள்? என்ன தொழில் செய்கிறீர்கள்? என, தாய் உள்ளத்துடன் விசாரித்தார். தொகுதியில் தேர்தல் பணியை கவனிக்கும்படி கூறினார். அவரை போல், துணிச்சலாக முடிவு எடுக்கும் தலைவர், உலகத்தில் யாரும் இல்லை.
ஸ்டாலினுக்கு எதிராக உங்கள் பிரசாரம் எப்படி இருக்கும்?
ஸ்டாலினை பற்றிய உண்மைகளை மக்களிடம் கொண்டு செல்வேன். "2ஜி' விவகாரத்தில், தங்கையும், அம்மாவும் மாட்டிக்கிட்டதாகவும், தான் தப்பித்து விட்டதாகவும், ஸ்டாலின் நினைக்கிறார். "2ஜி' விவகாரத்தில், ஸ்டாலினுக்கு தொடர்பு உண்டா என்பது குறித்து, முதல்வர் ஜெயலலிதா பிரதமரானதும், "2ஜி' பற்றி விசாரணை நடத்தும்போது உண்மை தெரியவரும். கலைஞர், "டிவி'யில், தயாளுவுக்கு, 60 சதவீதம் பங்கு இருக்கிறது என்றால், அதில் ஸ்டாலினுக்கு மட்டுமல்ல, அழகிரி, செல்வி, தமிழரசுக்கும் பங்கு உண்டு. கட்சிப் பொருளாளர் என்றால், அந்த வேலையை மட்டும் ஸ்டாலின் பார்க்க வேண்டும். உட்கட்சி தேர்தல் பணிகளில் தலையிடக் கூடாது. கட்சியை வழி நடத்தி செல்ல, கருணாநிதிக்கு அனைத்து தகுதியும் இருக்கும்போது, அவரை ஏன் ஓரம் கட்டி வைக்க, ஸ்டாலின் ஆசைப்படுகிறார்; கட்சியை கைப்பற்றத்தானே!
"அண்ணன், தம்பி உறவிலிருந்து எங்களை யாரும் பிரிக்க முடியாது' என, அழகிரி கூறியதால் தான், நீங்கள், அ.தி.மு.க.,வில் இணைந்தீர்களா?
அழகிரி அப்படி பேசியது, அவருடன் இருப்பவர்களுக்கு, சற்று நெருடலாகத்தான் இருக்கும். நான், அ.தி.மு.க.,வில் இணையப் போகிறேன் என்பதை, அவரிடம் தெரிவித்தேன். என்னை போக வேண்டாம் என்றோ, போ என்றோ அவர் சொல்லவில்லை. அமைதியே அவரது பதிலாக இருந்தது.
அழகிரியை கட்சியிலிருந்து நீக்கினாலும், அவருடைய அன்புக்கும், விசுவாசத்திற்காகவும், வார்டு அளவில், 10 பேர் உள்ளனர். ஆனால், ஸ்டாலினை கட்சியை விட்டு நீக்கினால், ஒருவர் கூட அவருக்கு துணைக்கு வரமாட்டார்கள். புலியை பார்த்து பூனை சூடு போட்ட பழமொழி தான், ஸ்டாலின் எடுத்த முடிவுக்கு பொருந்துகிறது. இவ்வாறு, நடிகர் ரித்தீஷ் கூறினார்.
SOURCE: DINAMALAR

No comments:
Post a Comment