சிவகங்கை நாடாளுமன்ற
தொகுதி தேவகோட்டை பகுதியில், திமுக வேட்பாளர் துரைராஜ் அவர்களை ஆதரித்து
அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பிரச்சாரம்
மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
நீங்கள் நாளேடுகளை படித்து பார்த்திருக்கிறீர்கள். உங்களுக்கே தெரியும். அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது நில மோசடி புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. அதுவும் நான் யாரை குறிப்பிடுகிறேன் என்று உங்களுக்கே தெரியும். இந்த நாடாளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் மீது நில மோசடி புகார் பதிவாகி உள்ளது. ஆனால் நமது வேட்பாளரோ அன்பானவர். பண்பானவர். எந்த வழக்குகளிலும் சிக்காதவர். இவர்தான் தலைவர் கலைஞர் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
கழக ஆட்சியில் இந்த தேவக்கோட்டைக்கு என்னென்ன திட்டங்கள் செய்து கொடுத்திருக்கிறோம் என உங்களுக்கே தெரியும். அதில் சிலவற்றை குறிப்பிட விரும்புகிறேன். தேவக்கோட்டையில் 1 கோடியே 46 லட்சம் ரூபாய்க்கு குடிநீர் நீர்த் தேக்க தொட்டிகள், தார்சாலைகள், இந்த பகுதிக்கு அமைத்துக் கொடுத்தது கழக ஆட்சியில்தான். 20 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து நிழற்குடைகள், பயணிகளுக்கான வசதிகள், கட்டண கழிப்பறை மற்றும் பல வசதிகள் செய்து கொடுத்ததும் கழக ஆட்சியில்தான்.

ஆனால்
ஜெயலலிதா ஆட்சியில் சொன்னதை எதையாவது செய்திருக்கிறார்களா.
முதியோர்களுக்கு பஸ் பாஸ் வழங்கப்படும் என்றார், தடையில்லா மின்சாரம்
கிடைக்கும் என்றார். மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும்
என்றார். இதில் ஏதாவது செய்திருக்கிறாரா.
20 லிட்டர் குடிநீர் இலவசமாக வழங்கப்படும் என்றார். ஆனால் இப்போது அம்மா தண்ணீர் என்று 10 ரூபாய்க்கு அரசாங்கமே விற்கிறது. இந்த ஆட்சி வெறும் வியாபார ஆட்சி. கமிஷன் ஆட்சி, லஞ்ச லாவண்யங்கள் நிறைந்த ஆட்சி.

ஜெயலலிதா
ஆட்சியில் பால் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. மின் கட்டணம், விலைவாசி
எல்லாம் விண்ணை முட்டுகிறது. மின்சாரமே இல்லை. ஆனால் மின்சார கட்டணம்
உயர்ந்திருக்கிறது.
இப்படி ஜெயலலிதாவின் அநியாய ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு தேர்தல் ஜெயலலிதா வெறும் அறிவிப்புகளை மட்டும் வெளியிடுகிறார் தேர்தல் அறிக்கையில். தேர்தல் முடிந்தவுடன் அந்த அறிவிப்புகள் வெறும் அறிவிப்புகளாகவே நின்று விடுகிறது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

No comments:
Post a Comment