Saturday, April 5, 2014

ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் நடத்திய விழாவில் த்ரிஷாவுக்கு எதிராக எழும்பும் கண்டனக் குரல்கள்!

இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இலங்கைக்கு எந்த தமிழ் சினிமாத்துறையினரும் செல்வதில்லை என்ற கட்டுப்பாட்டை தமிழ் திரையுலகம் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. அதனால்தான் எந்த தமிழ்ப்படங்களின் படப்பிடிப்பும் அங்கு நடைபெறுவதில்லை.
இந்த நிலையில், கனடாவில் ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் நடத்திய விழா ஒன்றில் நடிகை த்ரிஷா கலந்து கொண்டதாக தமிழ் அமைப்புகள் அவருக்கு எதிராக கண்டனக்குரல் எழுப்பியுள்ளன. மேலும், அந்த விழாவை நடத்தியதும் ஒரு தமிழர் அமைப்புதான் என்றாலும், அவர்கள் அனைவரும் ராஜபக்சேவுக்கு நெருக்கமான டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள் என்று மற்ற தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன. அதன்காரணமாகவே த்ரிஷா அவர்கள் நடத்திய விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது தவறு என்று போர்க்கொடி பிடித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment