Saturday, March 22, 2014

குஷ்பு பிரசாரம் செய்ய தடையா?: கருணாநிதி பதில்!

சென்னை: குஷ்பு தி.மு.க.விற்காக பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''குஷ்பு புறக்கணிக்கப்படவும் இல்லை, அவர் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்கவும் இல்லை. தி.மு.க.வின் முன்னணி பேச்சாளர்கள் அனைவருமே என்னுடைய சுற்றுப்பயண விவரம் வெளி வருவதற்காக காத்திருந்தார்கள்.

காரணம், எந்தத் தேதியில், நான் எந்த ஊரில் கலந்து கொள்கிறேன் என்பதைப்பொறுத்து, அவர்களுடைய நிகழ்ச்சிகளை வகுத்துக்கொள்வதற்காகத்தான் இந்த தாமதம்.

தற்போது என்னுடைய சுற்றுப் பயணம் உறுதிப்படுத்தப்பட்டு பத்திரிகைகளில் வெளிவந்து விட்டதால், அவர்களின் சுற்றுப் பயணங்கள் தலைமைக்கழகத்தால் வகுக்கப்பட்டு வருகின்றன. ஓரிரு நாட்களில் அவை வெளிவந்துவிடும்'' என்றார்.

SOURCE: VIKATAN

No comments:

Post a Comment