Saturday, March 22, 2014

இலங்கை அரசால் உயிருக்கு ஆபத்து: முன்னாள் அதிபர் சந்திரிகா குற்றச்சாட்டு

கொழும்பு : இலங்கை அரசால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக, இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கடந்த 5ஆம் தேதி அவர் எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.

இலங்கை அரசின் ரகசிய உளவு அமைப்புகள் தம்மை தொடர்ந்து கண்காணிப்பதாகவும், தமது தொலைபேசி உரையாடல்கள், இமெயில்கள் ஆகியவை வேவு பார்க்கப்படுவதாகவும், தமது 2 வீடுகளும் உளவு அமைப்புகளின் தொடர் கண்காணிப்பின் கீழ் இருப்பதாகவும், தம்மைச் சந்திக்கும் உறவினர்கள், நண்பர்களைக் கூட உளவுத்துறையினர் விசாரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு தமது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும், பாதுகாப்பு குறித்த அச்சத்தை தமக்கு ஏற்படுத்தியிருப்பதாகவும் சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார். 

ஆனால், சந்திரிகாவின் குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு மறுத்துள்ளது. இது தொடர்பாக இலங்கை அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், முன்னாள் அதிபர் சந்திரிகாவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment