கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க முயன்றதால்தான், ஜெயகுமாரி உள்ளிட்ட 3 பேரை கைது செய்ததாகவும், ஜெயகுமாரியின் 13 வயது மகள் கைது செய்யப்படவில்லை என்றும் இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களையும், வேலையில்லா இளைஞர்களையும் திரட்டி, புலிகள் இயக்கத்திற்கு உயிரூட்ட கே.பி.செல்வநாயகம் என்ற கோபி முயற்சிப்பதாக கூறப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் ஜெயகுமாரியின் வீட்டில் கோபி தங்கியிருந்த போது, பாதுகாப்புப் படையினர் அவரை பிடிக்க முயன்றதாகவும், கோபி தப்பிவிட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, கோபிக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக ஜெயகுமாரியை கைது செய்த போது, அவரது 13 வயது மகளை பாதுகாப்பாக ஒப்படைக்க உறவினர்கள் இல்லை என்பதால் பாதுகாப்பு கருதி உடன் அழைத்து வந்ததாகவும் இலங்கை அரசு கூறியுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்கும் முயற்சியில் தொடர்பு இருந்ததால் ருக்கி ஃபெர்னாண்டோவும், அவரது தந்தையும் கைது செய்யப்பட்டதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாண எம்.எல்.ஏ. ஆனந்தி சசிதரன், ஜெனிவா சென்று ஐநா மனித உரிமை கூட்டத்தில் புகார் கூறியிருப்பது, இலங்கையில் முழுமையான அளவில் ஜனநாயகம் இருப்பதை காட்டுவதாக இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.

SOURCE: VIKATAN

No comments:
Post a Comment