Wednesday, March 19, 2014

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு!

மும்பை: 7-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதலாவது போட்டியில் மும்பை இந்தியன் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகிறது. 

ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் முதல்கட்ட போட்டி, ஐக்கிய அரபு எமிரேட்டில் நடைபெறுகிறது.  

அபுதாபியில் ஷேக் ஷயாத் ஸ்டேடியம், சார்ஜாவில் உள்ள சிஏ ஸ்டேடியம், துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகியவை போட்டி நடைபெற உள்ள மைதானங்கள் ஆகும். இங்கு மொத்தம் 20 போட்டிகள் நடைபெறுகின்றன. 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் ஏறக்குறைய 14 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின்னர் சார்ஜா மற்றும் துபாய் ஸ்டேடியங்களில் விளையாட உள்ளனர். 

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடப்பதால், ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்கமுடியாது என மத்திய அரசு தெரிவித்துவிட்டதால், முதல்கட்ட ஐபிஎல் போட்டிகளுக்கு ஐக்கிய அரபு எமிரேடு தேர்வு செய்யப்பட்டது. 

இரண்டாவது கட்ட ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் பங்காளதேஷும் மாற்று இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கால அட்டவணை விவரம்:
ஏப்ரல் 16: மும்பை – கொல்கத்தா (இரவு 8 மணி)
ஏப்ரல் 17: டெல்லி – பெங்களூர் (இரவு 8 மணி)
ஏப்ரல் 18: சென்னை – பஞ்சாப்மாலை (மாலை 4 மணி)
ஏப்ரல்18: ஹைதராபாத் – ராஜஸ்தான் (இரவு 8 மணி)
ஏப்ரல் 19: பெங்களூர் – மும்பை (மாலை 4 மணி)
ஏப்ரல் 19: கொல்கத்தா – டெல்லி (இரவு 8 மணி)
ஏப்ரல் 20: ராஜஸ்தான் – பஞ்சாப் (இரவு 8 மணி)
ஏப்ரல் 21: சென்னை – டெல்லி (இரவு 8 மணி)
ஏப்ரல் 22: பஞ்சாப் – ஹைதராபாத் (இரவு 8 மணி)
ஏப்ரல் 23: ராஜஸ்தான் – சென்னை (இரவு 8 மணி)
ஏப்ரல் 24: பெங்களூர் – கொல்கத்தா (இரவு 8 மணி)
ஏப்ரல் 25: ஹைதராபாத் – டெல்லி (மாலை 4 மணி)
ஏப்ரல் 25: சென்னை – மும்பை (இரவு 8 மணி)
ஏப்ரல் 26: ராஜஸ்தான் – பெங்களூர் (இரவு 8 மணி)
ஏப்ரல் 26: பஞ்சாப் – கொல்கத்தா (இரவு 8 மணி)
ஏப்ரல் 27: டெல்லி – மும்பை (இரவு 8 மணி)
ஏப்ரல் 27: ஹைதராபாத் – சென்னை (இரவு 8 மணி)
ஏப்ரல் 28: பெங்களூர் – பஞ்சாப் (இரவு 8 மணி)
ஏப்ரல் 29: கொல்கத்தா – ராஜஸ்தான் (இரவு 8 மணி)
ஏப்ரல் 30: மும்பை – ஹைதராபாத் (இரவு 8 மணி)
இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் பிரச்சினை ஏற்படும் என்பதால் ஐபிஎல் போட்டிகளை 3 பகுதிகளாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது பகுதி மே 1 முதல் 12-ம் தேதி வரை நடைபெறும். இதனை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு வாய்ப்பு இல்லையென்றால் போட்டிகள் வங்கதேசத்துக்கு மாற்றப்படும்.
மூன்றாவது பகுதி மே 13-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 60 போட்டிகள் நடைபெறவுள்ளன.

Source: vikatan

No comments:

Post a Comment