Tuesday, March 25, 2014

20 ஓவர் உலக கிரிக்கெட் இந்திய பெண்கள் அணி தோல்வி

சைலெட்,
வங்காளதேசத்தில் நடந்து வரும் 20 ஓவர் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2–வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இலங்கை–இந்தியா அணிகள் மோதின. முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. பின்னர் 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 22 ரன் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வி கண்டது.
SOURCE: DAILY THANDHI

No comments:

Post a Comment