மிர்பூர்,
5–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதன் சூப்பர்–10 சுற்றில் விளையாடும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. சூப்பர்–10 சுற்றில் குரூப் 2–ல் பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா -பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து விளையாடியது. பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 191 ரன்கள் எடுத்தது. உமர் அக்மல் அதிகபட்சமாக 94 ரன்கள் அடித்தார். இதனை அடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்து விளையாடியது.
ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 175 ரன்கள் எடுத்து, 16 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. அணியில் அதிகபட்சமாக மேஸ்வெல் 74 ரன்களும், பிஞ்ச் 65 ரன்களும் எடுத்தனர்
SOURCE: DAILY THANDHI

No comments:
Post a Comment