Sunday, March 23, 2014

20 ஓவர் உலக கோப்பை இந்தியா அணி அபார வெற்றி 130\3 ரன் எடுத்தது

டாக்கா,
5–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதன் சூப்பர்–10 சுற்றில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் குரூப்2–ல் இடம் பெற்றுள்ள இந்தியாவும், நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீசும் மோதுகின்றன.  இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்தது.
பேட்டிங் செய்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களுக்கு 7 விக்கெட்களை இழந்து 129 ரன்கள் அடித்து, இந்திய அணிக்கு 130 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக கெயில் 34 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் ஜடேஜா 3 விக்கெட்களையும், மிஸ்ரா 2 விக்கெட்களையும், அஸ்வின் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.130 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
 
SOURCE: DAILY THANDHI

No comments:

Post a Comment