Monday, May 11, 2015

குற்ற உணர்வின்றி தூங்க முடியுமா?- ஜெயலலிதாவுக்கு குஷ்பு கேள்வி!

சென்னை: 18 ஆண்டுகள் நீதித்துறையை கேலிக்குரியதாக்கி இப்போது விடுதலையடைந்துள்ளீர்கள். ஆனால், உங்களால் குற்ற உணர்வின்றி உறங்க முடியுமா? என்று ஜெயலலிதாவுக்கு,  காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி இன்று தீர்ப்பு அளித்தார்.

இந்தத் தீர்ப்பையொட்டி, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், "விடுவிப்பு என்ற ஒரு வார்த்தை உங்கள் குற்ற உணர்ச்சியை போக்கிவிடாது. 18 ஆண்டுகள் நீதித்துறையை கேலிக்குரியதாக்கி இப்போது விடுதலையடைந்துள்ளீர்கள். ஆனால், உங்களால் குற்ற உணர்வின்றி உறங்க முடியுமா?" என்று கூறியுள்ளார்.

thanks: vikatan

No comments:

Post a Comment