அட்டகத்தி', 'மெட்ராஸ்' படங்களைத் தந்த பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
'லிங்கா' பட அனுபவத்தால் மீண்டும் ஓர் உடனடி ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற
கட்டாயத்தில் இருக்கிறார் ரஜினி. இதனால் ஷங்கர் - ரஜினி கூட்டணி மீண்டும்
சேர வாய்ப்பு அதிகம் என்றது கோலிவுட்.
ரஜினியும் தனது அடுத்த படம் கண்டிப்பாக ஹிட்டாக வேண்டும் என்று பல்வேறு
இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறார். ஷங்கர் கூறிய 'எந்திரன் 2', ராகவா
லாரன்ஸ், சுந்தர்.சி என பலரும் ரஜினியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி
வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த இயக்குநர்கள் பட்டியலில் இயக்குநர் ரஞ்சித்தின் பெயரும்
சேர்ந்துள்ளது மட்டுமன்றி, அவர் கூறிய கதையில் நடிக்க உடனடியாக சம்மதம்
தெரிவித்துவிட்டார் ரஜினி என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இப்படத்தை தாணு தயாரிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது.
இச்செய்தி குறித்து தாணுவிடம் கேட்டபோது, "இதில் உண்மையில்லை" என்று
தெரிவித்தார்.
இது குறித்து ரஜினி தரப்பில் விசாரித்த போது, "இயக்குநர் ரஞ்சித் மற்றும்
கார்த்திக் சுப்புராஜ் போன்ற இளம் இயக்குநர்கள் எனக்கான கதை எதுவும்
வைத்திருப்பார்களா என்று ரஜினி விசாரித்தது உண்மைதான். 'லிங்கா'
படத்துக்குப் பிறகு நிறைய இயக்குநர்களிடம் ரஜினி கதை கேட்டு விட்டார்.
ஆனால், எந்தப் படத்தை உறுதி செய்கிறார் என்பது அவருடைய முடிவில்தான்
இருக்கிறது. இயக்குநர் ரஞ்சித் ரஜினியை சந்தித்து ஒரு வரிக் கதையை கூறியது
உண்மை. அக்கதையைக் கேட்டவுடன் உடனே நடிக்க சம்மதம் தெரிவித்து, முழுவடிவம்
கேட்டிருக்கிறார் ரஜினி" என்றார்கள்.
'எந்திரன் 2'-க்காக நடைபெற்ற கதை விவாதங்கள்
'ஐ' படத்தின் படப்பிடிப்பு தாமதமானபோது விஜய் - விக்ரம் இருவரையும் மனதில்
வைத்து கதை ஒன்றை எழுதினார் ஷங்கர். 'லிங்கா' படத்தைத் தொடர்ந்து மீண்டும்
இணையலாம் என்று ரஜினி கேட்டுக் கொண்டதன் பேரில் அக்கதையை ரஜினிக்காக
மாற்றினார்.
தற்போது, ரஜினி நடிக்கவிருப்பதால் பட்ஜெட்டும் அதிகமாகி இருக்கிறது.
நடிகர்கள் - தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் நீங்கலாக படப்பிடிப்புக்கு
மட்டுமே ரூ.190 கோடி பட்ஜெட். இதற்கு, லைக்கா நிறுவனம் சம்மதம்
தெரிவித்துவிட்டது.
விஜய்யை மனதில் வைத்து எழுதிய கதையில் நாயகனாக ரஜினி இடம்பெற்றுவிட்டதால், வில்லன் வேடம் யார் என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்தது.
நாயகனுக்கு இணையான வில்லன் வேடம் என்பதால் பெரிய நடிகர்கள் யாராவது
நடித்தால் மட்டுமே நன்றாக இருக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஷங்கர்.
விஜய் - விக்ரம் இருவருக்கும் எழுதிய கதை என்பதால், தற்போது ரஜினிக்கு
வில்லனாக விக்ரமை நடிக்க வைக்கலாமா என்ற ஆலோசனையில் இருக்கிறார்.
தற்போது விக்ரம் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பதால், சென்னை
திரும்பிய உடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு
இருக்கிறார்கள்.
இவ்வாறு தொடர்ச்சியாக நிறைய இயக்குநர்களிடம் கதையைக் கேட்டு, தற்போது
இயக்குநர் ரஞ்சித் கதையை உறுதி செய்திருக்கிறார் ரஜினி. இதற்கான
அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.45 நாட்கள் ரஜினியின் கால்ஷீட், மூன்று மாதங்கள் படப்பிடிப்பு, பொங்கலுக்கு படத்தை முடித்து வெளியிட இயக்குநர் ரஞ்சித் திட்டமிட்டு இருக்கிறார்.
ரஜினியும் தனது அடுத்தப் படம் நிச்சயம் ஹிட்டாக வேண்டும் என்று பல முக்கிய
இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறார். ஷங்கர் கூறிய 'எந்திரன் 2', ராகவா
லாரன்ஸ், சுந்தர்.சி, ரஞ்சித் என பலரும் ரஜினியை சந்தித்து பேச்சுவார்த்தை
நடத்தி வருகிறார்கள்.
இடையில், தனக்கு நெருக்கமானவர்களிடம் ரஜினி பேசும்போது, "கார்த்திக்
சுப்புராஜ், ரஞ்சித் மாதிரியான இளம் இயக்குநர்கள் அசத்தி வருகிறார்கள்.
நமக்கு செட் ஆகிற மாதிரி அவர்களிடம் ஏதாவது கதை இருக்க வாய்ப்பு இருக்கா?"
என்று கேட்டிருக்கிறார்.
சமகால தமிழ் சினிமா சூழலுக்கு ஏற்ப தன்னை வடிவமைத்துக்கொள்ள ரஜினி
முன்வந்ததை, அவருக்கு நெருக்கமானவர்கள் வரவேற்றிருக்கிறார்கள். அதன்
தொடர்ச்சியாகவே, ரஜினியை சந்தித்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.
இயக்குநர் ரஞ்சித் சொன்ன கதையைக் கேட்டவுடன், உடனே தேதிகள் ஒதுக்கி
கொடுத்திருக்கிறார் ரஜினி. எப்படி சாத்தியமானது என்று இயக்குநர் ரஞ்சித்
தரப்பில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்:
இயக்குநர் ரஞ்சித்தின் கதையை முதலில் கேட்டு, அவரை ரஜினியிடம் அழைத்துச்
சென்றவர் செளந்தர்யா ரஜினிகாந்த். ரஜினிகாந்த் - ரஞ்சித் சந்திப்பு இதுவரை
இரண்டு முறை நடந்திருக்கிறது.
முதலில் படத்தின் கதைச் சுருக்கத்தைக் கேட்ட ரஜினிகாந்த், "சூப்பராக
இருக்கிறது" என்று இயக்குநர் ரஞ்சித்தை கட்டிப்பிடித்து பாராட்டி
இருக்கிறார். "உடனடியாக முழுக்கதையையும் தயார் பண்ணுங்கள்" என்றவுடன்,
"சார்.. இப்படத்தின் முழுக்கதையும் என்னிடம் தயாராக இருக்கிறது" என்று
தெரிவித்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.
"தயாரிப்பாளர் தாணு என்னுடைய நீண்ட கால நண்பர். அவருக்கு நான் செய்ய
வேண்டிய உதவிகள் நிறைய இருக்கிறது. அவரைப் போய் பாருங்கள். அவர் தான்
தயாரிப்பாளர்" என்று தெரிவித்திருக்கிறார் ரஜினி.
தாணுவை சந்தித்து பேசியிருக்கிறார் இயக்குநர் ரஞ்சித். "ரஜினி சார்
பேசினார். 30 நாட்கள் கால்ஷீட் தருகிறேன் என்று தெரிவித்தார். நான் அவரிடம்
45 நாட்கள் கேட்டு வாங்கியிருக்கிறேன். 45 நாட்கள் ரஜினி சம்பந்தப்பட்ட
காட்சிகள், 45 நாட்கள் ரஜினி இல்லாத காட்சிகள். ஆக மொத்தம் 90 நாட்களில்
படப்பிடிப்பு முடிக்க வேண்டும். பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டு
இருக்கிறேன்" என்று இயக்குநர் ரஞ்சித்திடம் தெரிவித்திருக்கிறார் தாணு.
தாணு இந்த வேகமான முடிவுகள், இயக்குநர் ரஞ்சித்தை மிகவும் சந்தோஷமடைய
வைத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து ரஜினி - ரஞ்சித் - தாணு கூட்டணி இறுதி
செய்யப்பட்டு இருக்கிறது.
ரஜினி படத்தை இயக்கவிருப்பதைத் தொடர்ந்து இயக்குநர் ரஞ்சித், தனது
நெருங்கிய நண்பர்களுக்கு விருந்தளித்திருக்கிறார். இப்படத்தின் கதைப்படி
அரசியலை ஒரு சிறு களமாக அமைத்திருக்கிறாராம் இயக்குநர் ரஞ்சித்.
தன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ரஞ்சித், ரஜினி படம்
இயக்கவிருப்பதற்கு இயக்குநர் வெங்கட்பிரபு "நீ என்னை பெருமிதம் கொள்ளச்
செய்துவிட்டாய் ரஞ்சித். இது அற்புதமான தருணம். லவ் யூ டா... பின்னிப்
பெடல் எடு" என்று தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
thanks : the hindu tamil
thanks : the hindu tamil

No comments:
Post a Comment