WI- 39-4 IN 10 OVERS
பெர்த்: உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய பவுலர்கள் அசத்த, வெஸ்ட் இண்டீஸ் அணி ரன் சேர்க்க திணறுகிறது.ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில், இன்று நடக்கும் உலக கோப்பைக்கான 'பி' பிரிவு லீக் போட்டியில், 'நடப்பு சாம்பியன்' இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடுகின்றன. வெஸ்ட் இண்டீஸ் அணியில் சுலைமன் பென் நீக்கப்பட்டு கீமர் ரோச் இடம் பிடித்தார். இந்திய அணியில் காயத்தில் இருந்து மீண்ட முகமது ஷமி வாய்ப்பு பெற்றார். புவவேஷ்வர் குமாருக்கு இடம் கிடைக்கவில்லை. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர், 'பேட்டிங்' தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி பவுலிங் செய்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு டுவைன் ஸ்மித் (6) ஏமாற்றினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 6 ஓவரில், ஒரு விக்கெட்டுக்கு 10 ரன்கள் எடுத்திருந்தது. கிறிஸ் கெய்ல் (1), சாமுவேல்ஸ் (0) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் முகமது ஷமி ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

No comments:
Post a Comment