Friday, February 27, 2015

அஜித்தை இயக்க ஆசைப்படும் தெலுங்கின் மாஸ் இயக்குனர்

டோலிவுட்டின் மாஸ் இயக்குனரான பூரி ஜெகன்நாத் தமிழில் அஜித்தை வைத்து இயக்க ஆசைப்படுகின்றாராம். தெலுங்கில் பல ஹீரோக்களுக்கு மாஸ் இமேஜ் கொடுத்தவர் பூரி ஜெகன்நாத்.
அவர் இயக்கத்தில் வெளிவந்த போக்கிரி படம், தமிழ், ஹிந்தி மற்றும் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. மேலும் இவரது சமீபத்திய படமான ஜீனியர் NTR-ன் டெம்பர் படமும் பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது.
இவர் தமிழ் படம் இயக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அஜித்தை வைத்து இயக்குவேன் என அவரின் நெருங்கிய வட்டாரத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அஜித் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த படமான வீரம் படத்தினை தெலுங்கு இயக்குனரான சிவா இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment