கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பைப் பெற்றது. எனினும் அஜித் ரசிகர்களுக்கு ஏற்ற தீனி படத்தில் இல்லை என்று தான் கூறவேண்டும்.
தற்போது, அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கின்றார் அஜித். என்னை அறிந்தால் படத்தில் விட்டதை இதில் பிடித்து விடலாம் என்று அஜித் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் பிந்து மாதவி நடிப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு இசையமைக்க ஜி.வி.பிரகாஷ் குமாரிடம் கேட்கப்பட்டதாகவும் அவரும் தலையசைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
முன்னர் அனிரூத் இதற்கு இசையமைப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் ஏன் இந்த திடீர் மாற்றம் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. ஜி.வி பிரகாஷ் அஜித்துடன் கிரீடம் படத்திற்குப் பிறகு 8 வருடங்கள் கழித்து இப்படத்தில் இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment