Monday, August 25, 2014

ஈழத் துரோகம்: அஞ்சானுக்கு பாடம் புகட்டிய ரசிகர்கள்

கோலிவுட்டில் தற்போதைய பரபரப்பு பேச்சு அஞ்சான் ப்ரஸ் மீட் பற்றியதுதான். இந்த ப்ரஸ் மீட்டில் கலந்து கொண்டு சூர்யா மற்றும் லிங்குசாமி இருவரும் புலம்பி தள்ளி விட்டார்கள்.
கடந்த வெள்ளி கிழமையன்று பிரமாண்டமாக வெளியான அஞ்சான் படம் குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த படம் திரையருங்குகளில் நன்றான ஓடிக்கொண்டிருப்பதாகவும் பிடிக்காத சிலரே நெகட்டிவ் கருத்துகளை பரப்பி வருவதாகவும் அந்த ப்ரஸ் மீட்டில் இருவரும் கதறினர்.
உங்களுக்கு இந்த நேரத்தில் இனம் படம் பற்றி ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன். இந்த படத்தை எடுத்தவர் சந்தோஷ் சிவன் தான். இவர்தான் அஞ்சான் படத்திற்கு ஒளிப்பதிவாளரும் கூட. இனம் படம் ஈழத் தமிழருக்கு எதிராக இருப்பதாக ஆரம்பத்திலிருந்தே படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அந்த எதிர்ப்பை மீறி பிரதர்ஸ் நிறுவனம் படத்தை வாங்கி வெளியிட்டது. படம் வெளியான பிறகு கடும் எதிர்ப்பு வரவே அந்தப் படத்தை தியேட்டரிலிருந்து திரும்ப பெற்றனர்.
பொதுவாக விநியோகஸ்தர்கள் ஒரு படத்தை வாங்கி வெளியிட முன்வந்தால் முதலில் குறிப்பிட்ட அந்தப் படம் விநியோகஸ்தர்களுக்குதான் திரையிட்டு காண்பிக்கப்படும். அப்படி பார்த்தால், இனம் படத்தை வாங்கி வெளியிடுவதற்கு முன்பாகவே அந்தப் படம் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இருப்பதை பிரதர்ஸ் நிறுவனத்தினர் அறிந்திப்பர். ஆனால் அதையெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காத பிரதர்ஸ் நிறுவனத்தினர், சந்தோஷ் சிவன் அஞ்சான் ஒளிப்பதிவாளர் என்பதற்காக எதிர்ப்பையும் மீறி இனம் படத்தை வாங்கி வெளியிட்டனர்.
ஒரு கட்டத்தில் அனைத்து தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பவே எங்கே இது தன்னுடைய பிரமாண்ட தயாரிப்பு பட்ஜெட் படமான அஞ்சான் படத்திற்கு பிரச்சனையாக மாறிவிடுமோ என பயந்துதான் பின் வாங்கினர். இந்நிலையில் ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்த பிரதர்ஸ் நிறுவனத்திற்கு தற்போது அஞ்சான் படத்தின் மூலம் ரசிகர்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர். இதே தவறை தான் சூர்ய நடிகரும் அஞ்சான் படத்தில் நடிக்க வருவதற்கு முன்பாக கௌதம் மேனனுக்கு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment