Wednesday, August 13, 2014

ஹீரோ இமேஜ் என்பது ஒன்றுமே இல்லை, படத்திற்கு கதைதான் ராஜா :சித்தார்த்!

‘ஜிகர்தண்டா’ மூலம் அனைவரின் நன்மதிப்பைப் பெற்று வருகிறார் சித்தார்த். ஒரு ஹீரோவாக இருந்து சிம்ஹாவின் கதாபாத்திரத்திற்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்க ஒப்புக் கொண்டீர்கள் என்ற கேள்விக்கு பதில் கூறியுள்ளார்.
” படத்தில் சிம்ஹாவின் பாத்திரத்தைப் புரிந்து கொண்டேன் எனவே தான் ஒப்புக் கொண்டேன். ‘ரங் தே பசந்தி’ படத்தில் நான் நடித்த போது எனது கதாபாத்திரம் அறிந்து அமீர் கான் எனக்கு நடிக்க இடம் கொடுத்தார்.

ஹீரோ இமேஜ் என்பது ஒன்றுமே இல்லை, படத்திற்கு கதைதான் ராஜா என்பதைப் புரிந்து கொண்டதால்தான் ‘ஜிகர்தண்டா’ வெற்றி பெற்றது ” என சித்தார்த் கூறுகிறார்.
சித்தார்த் தற்போது ‘காவியத்தலைவன்’, மற்றும் ‘லூசியா படங்களில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

No comments:

Post a Comment