Thursday, July 3, 2014

உத்தம வில்லன் satellite right பெரும் தொகை கொடுத்து வாங்கிவிட்டதா? Z-தமிழ்




 நட்சத்திர வெற்றி சேனலின் ரம்மியமான ஆஸ்தான தொகுப்பாளினி இலை சேனலில் உச்ச நடிகரின் வாரிசு பேட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை சேனல் விரும்பவில்லையாம். விளக்கம் கேட்டிருக்கிறது தொகுப்பாளினியிடம். நல்ல புரோகிராம் கிடைத்தால் எந்த சேனலிலும் பணியாற்றுவேன் என்று சொல்லிவிட்டாராம் ரம்யம்.

* வேல்ட் ஹீரோ நடிக்கும் நல்ல கெட்டவன் படத்தை வாங்க இலை சேனலும், நட்சத்திர வெற்றி சேனலும் கடுமையாக போட்டியிட்டதாம். இடையில் புகுந்த ஆங்கிலத்தின் கடை எழுத்து சேனல் பெரும் தொகை கொடுத்து வாங்கிவிட்டதாம்.

* புதிதாக தொடங்கப்பட்ட மன்னன் சேனல் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால், தொடங்கிய கல்வி நிறுவன பிரமுகருக்கு ஷாக்காம். நம்பிக்கையோடு வேலையில் சேர்ந்தவர்களும் கழன்று கொண்டிருக்கிறார்களாம்.

* மூவர்ண கொடி கட்சி பிரமுகர் தொடங்கிய பெரிய சேனல் பெரும் நஷ்டத்தில் போய் கொண்டிருக்கிறதாம். கட்சியும் இப்போது அதிகாரத்தை இழந்து விட்டதால் சேனலை கைமாற்றி விடும் முடிவில் இருக்கிறாராம் பிரமுகர்.

* காப்பியுடன் பேட்டி எடுக்கும் தொகுப்பாளினிக்கு திருமணம் நடக்க இருப்பதால் கொஞ்ச நாளைக்கு நிகழ்ச்சியிலிருந்து விலக நினைத்திருக்கிறார். அந்த இடத்தை பிடிப்பதற்கு தொகுப்பாளினிகள் இடையே கடும் போட்டியாம்.

No comments:

Post a Comment