ஆண்ட்ரியாதான் அனிருத்தின் முதல் தோழியாக இருந்தார். ஆனால் ஒருகட்டத்தில் அதுவே கொஞ்சம் ஓவராகி விட, அத்து மீறி விட்டார் அனிருத். அதையடுத்து அவரது சகவாசமே வேண்டாமென்று துண்டித்து விட்டார் ஆண்ட்ரியா. இப்போது தன் எதிரே அனிருத் வருகிறார் என்றாலே முகத்தை வெடுக்கென்று திருப்பிக்கொண்டு நடக்கிறார்.
அதன்பிறகு அனிருத்தை நெருங்க மற்ற நடிகைகளெல்லாம் அஞ்சிக்கொண்டிருக்க, எதிர்நீச்சல் ப்ரியாஆனந்த், சமீபகாலமாக அனிருத்துடன் நட்பு வளர்த்து வருகிறார். ஆண்ட்ரியாவின் கதைய சொல்லி பலரும் அச்சுறுத்தியபோதும், என் லிமிட் எனக்கு தெரியும். அதனால் ஒருபோதும் நான் எல்லைதாண்டும் அளவுக்கு யாருடனும் பழகமாட்டேன் என்று சொல்லிவிட்டு அனிருத்தின் நட்பு வளர்த்து வருகிறார்.
அவரைத் தொடர்ந்து இப்போது ஸ்ருதி ஹாசனும், அனிருத்தின் அடுத்த தோழியாகி இருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், சமீபகாலமாக நான் பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியிருக்கிறேன். அவர்களின் பாடல்களை ரசித்திருக்கிறேன். ஆனால், அனிருத்தின் இசை ரொம்ப வித்தியாசமாக உள்ளது. அவரது அற்புதமான இசை காரணமாக நான் அவரது ரசிகை மட்டுமின்றி தோழியாகி விட்டேன். அதோடு அவரது இசையில் நிறைய பாடல்கள் பாடவேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன் என்கிறார் ஸ்ருதிஹாசன்.

No comments:
Post a Comment