பாலிவுட் நடிகைகளை காப்பி அடித்து காஸ்ட்யூம் அணியவில்லை என்கிறார் சமந்தா. சமீபத்தில் சமந்தா ஒரு விழாவில் கலந்துகொண்டார். அதில் வித்தியாசமான காஸ்ட்யூம் (உடை) அணிந்து வந்தார். இதுபற்றி விமர்சனம் எழுந்தது. கேன்ஸ் பட விழாவின்போது பங்கேற்ற சோனம் கபூர் அணிந்திருந்த காஸ்ட்யூம் போலவே சமந்தாவும் அணிந்திருக்கிறார். உடை அணிவதில் சோனம் கபூரை அவர் பின்பற்றுகிறார் என்றதுடன் தலையில் அவர் அணிந்திருந்த நெற்றிச்சுட்டியும் தீபிகா படுகோன் பயன்படுத்தியதுபோலவே உள்ளது என்று கூறினர்.
இது சமந்தாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அந்த கோபத்தில் அவர் சூடாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு டிசைன் வடிவமைத்து வடிவமைப்பாளர்கள் கொண்டு வருவார்கள். அது தேசிய அளவில் சர்வதேச அளவில் பயன்படுத்துவதாக இருக்கலாம். ஒரு பிரபலம் (சோனம் கபூர்) அணிந்த உடைபோல் நான் அணிந்திருந்தேன் என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.
இதுபோன்ற உடைகளை தனிப்பட்ட ஒரு பிரபலம் பயன்படுத்துவதற்காக மட்டுமே உருவாக்கப்படுவதில்லை. அத்துடன் அதுபோல் ஒரேயொரு உடையும் தயாரிக்கப்படுவதில்லை. இதுபோன்ற உடைகள் ஷாப்களிலும், ஆன்லைனிலும் கிடைக்கின்றன. ஸ்டைல் என்பது ஒரே பாணியில் அணியும் மாடலாகவும் இருக்கலாம் என்றார்.

No comments:
Post a Comment