வீட்டில் இருக்கும்போது கொஞ்சி விளையாட செல்ல நாய்குட்டி வாங்கினார் தமன்னா. தமன்னாவுக்கு சிறுவயது முதலே நாய் குட்டி என்றால் பிரியம். எப்படியும் ஒரு நாய்க்குட்டியை வளர்க்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது அவரது அம்மாவுக்கு பிடிக்காது. தமன்னாவின் ஆசையும் அத்தோடு கனவாக நின்றுவிட்டது டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தாலும் நாய்க்குட்டி மீதான ஆசை மட்டும் தமன்னாவுக்கு குறையவில்லை. இந்த சமயத்தில்தான் இட்ஸ் என்டர்டெயின்மென்ட் என்ற தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இது நாய்க்குட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஸ்கிரிப்ட். படத்தில் வரும் நாயின் பெயர்தான் என்டர்டெயின்மென்ட்.
படம் முழுவதும் தமன்னாவுடன் வருகிறது. நாயுடன் விளையாடியபடி நடித்த தமன்னாவுக்கு சிறு வயது ஞாபகம் வந்துவிட்டது. உடனடியாக சென்று நாய்க்குட்டி வாங்கி வீட்டுக்கு கொண்டு சென்றுவிட்டார். அம்மா திட்டுவார்கள் என்ற எந்த பயமும் இல்லாமல் அதனுடன் கொஞ்சி மகிழும் தமன்னா அதற்கு பெபல்ஸ் என பெயரிட்டிருக்கிறார்.

No comments:
Post a Comment