Wednesday, July 2, 2014

ஆர்யா அழைத்தும் வராத பிரபல நடிகை

ஆர்யா தனது தம்பி சத்யாவை வைத்து தயாரித்த அமரகாவியம் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவிற்கு திரை பிரபலங்கள் பலர் வந்திருந்தனர். அதோடு ஆர்யாவுடன் இணைந்து நடித்த த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, லேகா வாஷிங்டன், பூஜா உள்ளிட்ட நடிகைகளும் வந்திருந்தனர். ஆனால், அழைப்பு விடுத்த நகைகளில் அனுஷ்கா மட்டும் மிஸ்ஸிங். முதலில் இசை தகட்டை நயன்தாரா வெளியிட, அனுஷ்கா பெற்றுக்கொள்வதுபோல்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் அனுஷ்கா விழாவை புறக்கணித்ததாலேயே கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பை த்ரிஷாவுக்கு வழங்கியிருக்கிறார் ஆர்யா. அனுஷ்கா விழாவிற்கு வராததற்கு காரணம் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததுதான் என்று கூறப்பட்டாலும், தற்போது இதுகுறித்து வேறொரு தகவல் கோலிவுட்டில் கிளம்பியுள்ளது.
இரண்டாம் உலகம் படப்பிடிப்பின்போது அனுஷ்காவுடன் நெருங்கி பழகிய ஆர்யா அதன்பின்னரும் நட்பை தொடர்ந்தாராம். இந்நிலையில் ஆர்யா, ராஜா ராணி, ஆரம்பம் போன்ற படங்களில் நடிக்கும்போது நயன்தாராவுடன் நெருக்கமானதால் அனுஷ்காவின் நட்பை முறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே,தெலுங்கில் அனுஷ்கா-நயன்தாராவிற்கும் இடையே கடும் தொழில் போட்டி இருப்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
SOURCE: DINNAMANI

No comments:

Post a Comment