Friday, July 4, 2014

கௌதம் மேனன் படத்தில் அஜித்துடன் மோதும் வில்லன் யார்?


கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அஜித்.
சத்யதேவ் என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்காவும், த்ரிஷாவும் நடிக்கின்றனர். அனுஷ்கா முதன் முறையாக இதில் சொந்தக் குரலில் பேச இருக்கிறார். மற்றும் அருண்விஜய், தன்ஷிகா ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைக்கிறார்.
மேலும் படத்தில் அஜித் அண்ணன்-தம்பி என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். வாலி படத்திற்கு பிறகு அஜித் அண்ணன், தம்பியாக நடிக்கும் படம் இது. இந்நிலையில் படத்தில் அஜித்துக்கு வில்லனாக ராஜசிம்மன் நடிக்கிறார்.
இவர் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்த 'குட்டிப்புலி' படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பை செப்டம்பர் மாதத்தில் முடித்து நவம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment