யாமி கௌதம் யார் என யாராவது கேட்டால் ‘கௌரவம்’ பார்க்காமல் கேள்வி கேட்டு விட வேண்டும். ஒரு அழகான நடிகை ஒரு படத்தில் நடித்த பிறகு மறந்து விடுவது ஒரு சினிமா ரசிகனுக்கு அழகா. அது எப்படி மறப்போம் என்கிறீர்களா…“அழகிய தீயே, மொழி, பயணம்,” ஆகிய படங்களை இயக்கிய ராதாமோகன் இயக்கிய ‘கௌரவம்’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர்தான் யாமி கௌதம். இந்தப் படம் மூலம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அறிமுகமானார். நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டு வரும் ‘தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும்’ படத்திலும் , சில இந்திப் படங்களிலும் தற்போது நாயகியாக நடித்து வருகிறார்.
எந்த நடிகையாக இருந்தாலும் எப்படியும் அவர்களது அழகின் ரகசியத்தைப் பற்றி சொல்லாமல் இருக்க மாட்டார்கள். ஒரு சிலர் பத்து, பதினைந்து வருடங்கள் ஆனால் கூட அப்படியே இருப்பார்கள். எப்படி நடிகைகளால் மட்டும் அப்படி இருக்க முடிகிறது என ஆச்சரியப்படுபவர்களுக்கு அவர்கள் சொல்லும் காரணங்களும் ஏற்புடையதாகவே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு காரணத்தைத்தான் தன்னுடைய அழகின் ரகசியம் என்கிறார் யாமி கௌதம். “சிரித்துக் கொண்டேயிருங்கள், அது உங்களது அழகைக் கூட்டும் என்ற தத்துவத்தைத்தான் காரணமாகச் சொல்கிறார் யாமி கௌதம். சிரிக்காம இருந்தால் அது நம்மை அழகா காட்டவே காட்டாது. அதனால எப்பவும் சிரிச்சிக்கிட்டேயிருங்க. சிரிப்பும், அழகும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது,” என்கிறார்.
இதையே பெரியவங்க சொன்னால் கேட்க மாட்டோம், அழகான பெண்கள் சொன்னால் கேட்காமலோ இருப்போம்.

No comments:
Post a Comment