Monday, July 21, 2014

மீடியாக்களைக் கண்டு தெறித்து ஓடும் ப்ரியாஆனந்த்!


அரிமா நம்பி படத்திற்கு முன்புவரை எந்த சர்ச்சையிலும் சிக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தார் ப்ரியாஆனந்த். அதோடு, தனக்கு பிறகு வந்த லட்சுமிமேனன், ஸ்ரீதிவ்யா, நந்திதா போன்ற நடிகைகள் தனக்கான பட வாய்ப்புகளை கைப்பற்றி வருவதால், திரைக்குப்பின்னால் அவர்களை எதிர்த்து போராடுவதே அவருக்கு ஒரு பெரிய வேலையாக இருந்து வந்தது.
இந்த நிலையில், தற்போது சில படங்களில் நடித்துள்ளார் அவர். இந்த நேரத்தில் சமீபத்தில் வெளியான அரிமா நம்பி படத்தில் சரக்கு அடிப்பதுபோல் அவர் நடித்திருப்பதால் முதன்முறையாக சர்ச்சையில் சக்கியிருக்கிறார் ப்ரியாஆனந்த். அதோடு, அப்படத்தின் டைரக்டர், ஆணுக்கு பெண் சரிசமம் என்பதை உணர்த்தவே அப்படி செய்தேன் என்று சொன்ன பதில்தான் இந்த விசயத்தை பூதாகரமாக்கி விட்டது.
விளைவு, இப்போது ஆளாலுக்கு ப்ரியாஆனந்த் எங்கு சென்றாலும் அதைப்பற்றியே கேட்டு வெறுப்பேற்றுகிறார்களாம். முக்கியமாக வெளியூர்களுக்கு செல்லும் இடங்களில் அவரை சந்திக்கும் மீடியாக்கள், எடுத்த எடுப்பிலேயே அந்த சரக்கு காட்சியில் நடித்தது பற்றித்தான் கேட்கிறார்களாம். அதனால் இதுவரை மீடியாக்களிடம் விழுந்து விழுந்து பேட்டி கொடுத்து வந்த ப்ரியாஆனந்த், இப்போது யாராவது மீடியாவினரை கண்டாலே தெறித்து ஓடிக்கொண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment