சித்தார்த், வேதிகா, பிரித்விராஜ், நாசர் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காவியத்தலைவன்’. இப்படத்தை இயக்குனர் வசந்தபாலன் இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சரித்திர படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் ஆடியோவை இம்மாத இறுதியில் வெளியிடப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை. படத்தை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.
இப்படத்தில் 20 பாடல்கள் உள்ளன. 1940-களில் நடக்கும் கதை என்பதால், அந்த காலத்திற்கேற்றார்போல் இசையை மாற்றியமைத்திருக்கிறார். இப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனமும், ரேடியன்ஸ் மீடியா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

No comments:
Post a Comment