தமிழ், தெலுங்கில் பிசியாக நடிக்கிறார் காஜல் அகர்வால். தமிழில் இவர் நடித்த துப்பாக்கி படம் மெகா ஹிட்டாக அமைந்தது. ‘ஆல் இன் அழகுராஜா’, ஜில்லா படங்களில் தொடர்ந்து நடித்தார். தற்போது பாலாஜி மோகன் இயக்கும் படத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கில் மூன்று படங்களும், இந்தியில் ஒரு படமும் கைவசம் உள்ளது.
காஜல் அகர்வால் கூறியதாவது:-
எனக்கு ஒரே நேரத்தில் நிறைய படங்களில் நடிப்பது பிடிக்காது. ஒரு படத்தை முடித்து விட்டுதான் அடுத்த படத்துக்கு போக வேண்டும். அப்போதுதான் நடித்துக் கொண்டிருக்கும் படத்துக்கு முழு உழைப்பையும் கொடுக்க முடியும். குறைவான படங்களில் நடித்தாலும் அவை தரமான படங்களாக இருக்க வேண்டும். நிறைய தரமற்ற படங்களில் நடித்தால் நிலைக்க முடியாது. நான் அழகாக இருப்பதாகவும், உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துள்ளதாகவும் பலர் பேசுகின்றனர். இதற்கு காரணம் யோகா. தினமும் யோகா பயிற்சி செய்கிறேன். அதுதான் என் அழகு ரகசியம்.
இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
SOURCE: TAMIL FILM NEWS

No comments:
Post a Comment