Sunday, July 6, 2014

அடுத்தடுத்து படங்கள் ரிலீஸ்…! அதிர்ச்சியில் இயக்குனர்கள்…!

ஆஸ்கர் நிறுவனம் தயாரிப்பில் 4 படங்களின் படப்பிடிப்பு முடிந்து அடுத்தடுத்து வெளிவர தயாராக உள்ளன. “திருமணம் என்னும் நிக்காஹ், பூலோகம், ஐ, விஸ்வரூபம் 2” ஆகிய படங்களை ஒரே சமயத்தில் கடந்த சில வருடங்களாக அந்த நிறுவனம் தயாரித்து வந்தது. எந்தப் படம் எப்போது வரும் என்று இதுவரை தெளிவாகத் தெரியாத நிலையில் தற்போது அனைத்து வேலைகளும் முடிந்து வெளியிடுவதற்கு தயாராக உள்ள “திருமணம் என்னும் நிக்காஹ், பூலோகம்” ஆகிய படங்களை அடுத்தடுத்து வெளியிட அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். இது அந்தப் படங்களின் இயக்குனர்களான அனீஸ், கல்யாணகிருஷ்ணன் ஆகியோரை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம்.
படங்கள் வெளிவந்தால் இயக்குனர்களுக்கு மகிழ்ச்சிதானே, அப்படியிருக்க அதிர்ச்சி ஏன் என்கிறீர்களா. இரு படத்தையும் அடுத்தடுத்த வாரங்களில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம். அதுதான் அதிர்ச்சிக்குக் காரணம். அவர்கள் தயாரித்துள்ள படங்களையே எப்படி அடுத்தடுத்த வாரங்களில் ரிலீஸ் செய்வார்கள், அது அந்தந்த படங்களுக்கே நல்லதில்லையே என்று வாய் திறந்து சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள் இயக்குனர்கள்.
காரணம், இருவருக்குமே இதுதான் முதல் படம். இந்த நிறுவனத்தின் முந்தைய படமான ‘வல்லினம்’ படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில் இந்த இரண்டு படங்களும் வெற்றி பெற்றால்தான் அது இயக்குனர்களுக்கும் பெயரைப் பெற்றுத் தரும். வெளியில் சொல்ல முடியாத வருத்தத்துடன் அமைதி காக்கிறார்களாம் இயக்குனர்கள்.

No comments:

Post a Comment