லண்டன்: கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் யாரென்றே தெரியாது என ரஷ்யாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா கூறியுள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்களை ஆத்திரம் அடைய வைத்துள்ளது.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை அடிக்கடி நேரில் சென்று பார்க்கும் வழக்கத்தை கொண்டுள்ள சச்சின் டெண்டுகல்கர், தற்போது நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை நேரில் பார்க்க லண்டன் சென்றுள்ளார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஒரு போட்டியை சச்சின் வி.ஐ.பி. இருக்கையில் முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காமுடன் இணைந்து நேரில் கண்டுகளித்தார். அப்போது, அவர்களுடன் கோல்ப் வீரர் இயான் பௌல்டர் மற்றும் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டிராஸ் ஆகியோர் இருந்துள்ளனர்.
அப்போது, வி.ஐ.பி. இருக்கையில் யாரெல்லாம் இருந்தார்கள் என்று மரியா ஷரபோவா நினைவு கூர்கையில், டேவிட் பெக்காம் இருந்தார் என்று தெரிவித்துள்ளார். ஆனால் அவருக்கு சச்சின் என்றால் யார் என்றே தெரியவில்லை.
டேவிட் பெக்காம் வந்திருந்த அதே நேரத்தில், சச்சினும் வந்திருந்தார். உங்களுக்கு டெண்டுல்கர் என்றால் யார் என்று தெரியுமா? என்று போட்டிக்கு பிறகு அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷரபோவா, யார் என்றே தெரியாது என்றார்.
அதேவேளையில், ரஷய நட்சத்திர வீராங்கனை ஷரபோவா, டேவிட் பெக்காம் குறித்து கூறுகையில், "நான் இரண்டு மூன்று தடவை லண்டனில் பெக்காமை சந்தித்துள்ளேன். அவர் ஒரு நல்ல மனிதர். நம்ப முடியாத கால்பந்து வீரர். தனது வரலாற்றில் நிறைய சாதனைகளை புரிந்துள்ளார். அவர் பழகுவதற்கு அருமையான நபர்" என்று தெரிவித்தார்.
SOURCE: VIKATAN

.jpg)
No comments:
Post a Comment