Tuesday, July 8, 2014

சூர்யா-நயன்தாரா-எமி ஜாக்சன் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் படம் மாஸ்


'சிங்கம்' படத்தை தயாரித்த ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அடுத்து, கார்த்தி நடித்த 'மெட்ராஸ்' படத்தை தயாரித்தது. இதையடுத்து இப்போது, 'கொம்பன்' என்ற படத்தை தயாரித்து வருகிறது. 'கொம்பனை' அடுத்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மீண்டும் சூர்யாவை வைத்து ஒரு புதிய படம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு, 'மாஸ்' என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

இதில், சூர்யா ஜோடியாக நயன்தாரா, எமிஜாக்சன் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். பசுபதி, ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி வெங்கட்பிரபு டைரக்டு செய்கிறார். கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்க, இணை தயாரிப்பு: எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு. 

படப்பிடிப்பு  சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற இருக்கிறது. காரைக்குடியில் சில முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். பாடல் காட்சிகள், வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளன.

SOURCE: DAILY THANDHI

No comments:

Post a Comment